சங்கடங்கள் தீர்க்கும் சங்கடகராசதுர்த்தி கணபதி நவக்கிரக வேள்வி (ஹோமம்) நடைபெறும் இடம்.
ஸ்ரீ குபோர கணபதி திருக்கோயில்,
கணபதி விளை, இடைக்கோடு, உதயமார்த்தாண்டம் அஞ்சல்.
(ஒவ்வொரு மாதமும் சங்கடகராசதுர்த்தி அன்று கணபதி, நவக்கிரக வேள்வி (ஹோமம்) சங்கடங்கள் தீர்க்க நடைபெறும்)
சதுர்வேதங்கள் பல்வேறு வேள்விகளைப் பற்றறிச் சொல்லியுள்ளன. இவைகள் பொருள் முதலான லௌகீக வாழ்வில் வெற்றியடையவும், வீடு பேறு நல்கும் “அவ்வுலக” இலக்கினை அடையும் வேள்விகளைப் பற்றியும் நிறையச் சொல்லிச் சென்றுள்ளன. அதனில் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடகராசதுர்த்தி நவக்கிரக வேள்வியும் முக்கியமான ஒன்றாகும்.
ஹோமங்கள் மற்றும் அவற்றின் வகைகள், பலன்கள், செய்முறை விளக்கம்
ஒரு ஜாதகரின் ராசி குண்டலியில் அடைபட்டு நிற்கும் கிரகங்களில் எவை நல்ல இடத்தில் உள்ளனவோ, அவை நன்மைகளை நிறைவாகத் தரும் பொருட்டும், எந்தக் கிரகங்கள் தீயஸ்தானத்தில் உள்ளனவோ அவை விசேஷ (சிறப்பு) நற்பலனை நல்கும் பொருட்டும் நிறுவப்பட்டுள்ள இலக்கை சங்கடங்கள் தீர்க்கும் சங்கடகராசதுர்த்தி நவக்கிரக வேள்விகள் நமக்கு ஈட்டுத் தருகின்றன.
ஒரு ஜாதகம் என்பது ஜனனத்தையும், வர்த்தமானமாகிய குல மற்றும் குடும்பப் பாரம்பரியத்தின் செல்வ விளக்கத்தையும், ஒரு மனிதனின் முற்பிறவிப் பலன்களையும் விளக்குவதால் இங்கு விதி எனும் முடிவை நிறுத்திக் காட்டுகின்றது.
நாமே தோத்திரம் செய்வது, பூஜிப்பது போன்ற செயல்களைவிட வேள்வியானது நிச்சயமான பலன்களை வழங்குவதாக உள்ளது. இதில் நவக்கிரக வேள்வி கால வெள்ளத்தைக் கடக்க, செல்வ வளம் பெற, வீடு பேறு அடைய உறுதுணையாக உள்ளது.
துயரமான விதி வாழ்வில் இருந்து விடுபட மற்றும் நிறைவை அடைய, நிச்சயமான பலன்களை நல்குவதால் நவக்கிரக வேள்வி பலன்களை நல்குவதால் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடகராசதுர்த்தி நவக்கிரக வேள்வி பல காலமாகவே நம் பெரியோர்களால் செய்யப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக சோழர் காலத்தில் இவ்வழிபாடு தமிழகமெங்கும் பரவியதாக அறிகிறோம்.
வேதமாகிய பரப்பிரம்மத்திற்கு ஜோதிடம் ஒரு கண் ஆகும். வேள்விகள் செய்ய, காலம் மிகவும் இன்றியமையாத ஒரு காரணியாகும்.
நவ கோள்களுக்கு முறையே அதிதேவதை, பிரத் ஆதிதேவதை என இருவர் உண்டு. இவ்வேள்வியில் மொத்தம் 9 × 2 + 1 = 27 தேவதைகள் ஆராதிக்கப்படுகின்றனர்.
27 தேவதைகளும் நம் உடம்பில் உள்ள சகல வியாதியையும், தொழில் நாசத்தையும் நிவர்த்தியாக்கும்.
ஹோமங்கள் மற்றும் அவற்றின் வகைகள், பலன்கள், செய்முறை விளக்கம்
வேதங்கள் உயர் லட்சியத்தையும் ஞானத்தையும் உடையன. இவைகளைப் புரிந்து கொள்ள வேதமுறை வாழ்க்கை இன்றியமையாதன. தாந்திரீக மந்திரங்கள் (மூல மந்திரம்) பலமுறை ஜபிக்கப்பட்டால் ஒழிய பலன் கிட்டாது.
புராணோக்த மந்திரங்கள் பல நாள் ஜபம் செய்தால் பலன் ஏற்படும். வேத மந்திரமோ ஒரே பாராயணத்தில் பலன் நல்கும். ஆகமங்களை விடவும், புராண, இதிகாசங்களையும் விட வேதம் செழிப்புமிக்கது. வேதம் சொன்ன விதிவழாது வேள்வி புரிய வேண்டும். வழங்கப்படும் நவக்கிரக தானப் பொருட்கள் கொடுப்பவனுக்கு அளவிலாப் பலன்களை நல்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.
தொடர்பு கொள்ளவும் Click Here
ஹோமங்கள் மற்றும் அவற்றின் வகைகள், பலன்கள், செய்முறை விளக்கம்
உங்களுக்கு ஏற்றவறு ஒவ்வொரு கிரகத்துக்கும் அர்ச்சனை செய்து வேள்வி நடத்தப்படும். வேள்வி விருந்தும் தரப்படும். (வேள்வி விருந்து பெற்றால் மட்டுமே நன்மை உண்டு)
இவ்வேள்வி சகல ஐஸ்வர்யங்களையும், மன நிம்மதியையும் வழங்கும்.
கிரக பீடைகளிலிருந்து விடுபட விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.
அனைத்து மாதமும் சங்கடகரா சதுர்த்தி அன்று காலை 5.00 மணி முதல் 8.00 வரை நடைப்பெறும்
9524020202 இந்த WhatsApp யில் நீங்கள் உங்கள் பிறந்த தேதி வருடம் நேரம், பெயர் மற்றும் முகவரி செல் நம்பர் உடன் அனுப்பவும்.
அனைவரும் பங்கு கொள்ளலாம் இதற்கு நன்கொடை ரூபாய் : 501/-.ஒரு மாதம் 9 பேர் மட்டுமே
Discussion about this post