மூலவர் :இருதலாயஈசுவார் (மன ஆலய ஈஸ்வரர்)
அம்மன்/தாயார் :மீனாட்சி
தல விருட்சம் :வில்வம்
தீர்த்தம் : சிற்றாறு
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :வீரகேரளம்புதூர்
ஊர் :வீரகேரளம்புதூர்
மாவட்டம் :திருநெல்வேலி
மாநிலம் :தமிழ்நாடு
இருதயாலீஸ்வரர் (மன ஆலய ஈஸ்வரர்), இறைவி: மரகதாம்பிகை (மரகதவல்லி). முதலில் பூசலார் நாயனார் புராணம்.
நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர். சிறநத சிவபக்தர். தினமும் அங்குள்ள லிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். கூரையற்ற லிங்கம் மழையிலும், வெயிலிலும் நனைந்ததைக் கண்ட பூசலாருக்கு ஆலயம் கட்டும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அவர் வசதியற்றவர்!
யாரும் உதவ முன்வரவில்லை. அதற்காக இவர் தளரவில்லை! தன்னிடம் ஏராளமான செல்வம் இருப்பது போல் கற்பனை செய்துகொண்டு, சிவனை மனதில் இருத்தி மனதுக்குள்ளேயே அனைத்து வசதிகளும் கொண்ட ஆலயத்தை உண்மையிலேயே கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அத்தனை ஆண்டுகள் எழுப்பினார்.
அதே வேளையில் காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் உண்மையாகவே ஆலயம் கட்டிக் கொண்டிருந்தான். இருவரும் ஒரே நேரத்தில் முடித்து குடமுழுக்கு விழாத் தேதியைக் குறித்தனர். சிவன், மன்னன் கனவில் தோன்றி “ நீ ஆலயம் எழுப்பியது மகிழ்ச்சி. ஆனால், திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தரும் விழாவிற்கு நாள் குறித்துவிட்டார். நான் அங்கு செல்ல வேண்டியிருப்பதால் நீ தேதியை மாற்றிக் கொள்” என்று கூறிவிட்டு மறைகிறார். மன்னன் திடுக்கிட்டுத் திருநின்றவூர் வருகிறான்.
விசாரித்தால் ஒருவருக்கும் ஆலயம் இருக்கும் இடம் தெரியவில்லை. பூசலாரைத் தேடி வணங்கி இறைவன் கனவில் கூறியதைக் கூறுகிறான். ”நான் ஆலயம் எழுப்பியது எனது இதயத்திற்குள்” என்கிறார் பூசலார். குறிப்பிட்ட தேதியில் அவரது இதயத்திற்குள் நடந்த கும்ப அபிஷேகத்திற்கு சிவபெருமான் எழுந்து அருள்கிறான். அன்றே இவ்வுலகை நீத்து நாயன்மார்களில் ஒருவராகிறார் பூசலார். அவரது விருப்பத்தைக் கருத்தில் கொண்டு மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்கிறான்!
சிறப்புகள்:இறைவனே வந்து நின்றதால் இது திருநின்றவூர். இதயத்தில் இறைவன் எழுந்து அருளியதால், இதயம் சார்ந்த நோய்களைக் களைய இங்கு வந்து வேண்டிக் கொள்ளவும். அமைதியான, அழகான ஆலயம்.
பொது தகவல்:
சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். “கஜபிருஷ்டம்’ என்னும் அமைப்பில் தூங்கானை மாட வடிவில் சுவாமியின் விமானம் அமைந்துள்ளது.
சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், நந்திதேவர், நாகர், நடராஜர் சன்னதிகள் அமைந்துள்ளன.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
Discussion about this post