நீண்ட உடல் அமைப்பையும்,கல்வியில் தேர்ச்சியும் பெற்று விளங்குவார்கள்.தெய்விக வழிபாடுகளில் பற்றுதல் இருக்கும்.பொதுவாக இவர்கள் அதிக சுகந்திர மனப் போக்கு கொண்டவர்கள்,அதனால் தான் யாரையும் லட்சியம் செய்யாமல் தனது இஷ்டம் போலக் காரியங்களைச் செய்து அதில் வெற்றியும் பெறுவார்கள்.புத்திர சந்தானங்களுக்குக் குறைவு இருக்காது.மனைவியின் போக்கின் படியே நடந்து கொள்வார்கள்.இந்த ராசியில் பிறந்த சிலர் தனக்கு நிகர் யாரும் கிடையாது என்ற எண்ணத்துடனும் இருப்பார்கள்.இது ஆயுள் காரகரான சனி பகவானின் வீடு என்பதால் இவர்களுக்கு 77 வயது வரை ஆயுள் பலம் (சுப கிரக பார்வை இருப்பின் ) சொல்லப் படுகிறது.மகர ராசியில் பிறந்தவர்கள் பிறக்கும் போது செல்வந்த குடும்பத்திலயே பிறந்து இருந்தாலும், நடுத்தர வயதில் பல சிரமத்தை சந்தித்து பிற்காலத்தில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது ஜோதிட விதி.
2016 ஆம் ஆண்டிற்கான மகர ராசியின் பலாபலன்கள்
அன்பார்ந்த மகர ராசி அன்பர்களே இந்த ஆண்டைப் பொருத்தவரையில் சனி பகவான் இந்த ஆண்டு முழுவதுமே உங்கள் ராசிக்குப் 11 ஆம் இடத்தில் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரும் அமைப்பு தான். தவிர சனி பகவான் உங்கள் ராசி நாதனாகவும் இருப்பதால் பொருளாதாரம் நல்ல நிலையில் உங்களுக்கு இருக்கும். எதிர்பார்த்த லாபங்களும் உங்களுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக சனி பகவான் உங்கள் ராசிக்கு 1,5,8 ஆம் இடங்களைப் பார்ப்பதால் சிலர் வெளி நாடு செல்வார்கள். உங்கள் செல்வாக்கு உயரும். எனினும், சனிபகவான் இந்த ஆண்டு முழுவதுமே இது போன்ற நல்ல பலன்களை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அதற்குக் காரணம் 28.3.2016 முதல் 14.7.2016 வரை சனி பகவான் வக்கிரம் அடைகிறார். அதன் படி உங்கள் ராசிக்கு நல்ல பலன்களை செய்யும் சனி பகவான் மேற்கண்ட இக்காலத்தில் கெடுவது (வக்கிரம் அடைவது) உங்களுக்கு சாதகமான நன்மைகளைச் செய்யாது. அதனால் இக்கால கட்டத்தில் மட்டும் அதிக கவனமுடன் இருக்கவும்.
மற்றபடி 8.1.2016 அன்று ராகு/கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது. அதன்படிப் பார்த்தால் இதுவரையில் 9 ஆம் இடத்தில் இருந்து வந்த ராகு இப்போது 8 ஆம் இடமான சிம்ம ராசிக்கு வருகிறார். இது ராகுவைப் பொருத்த வரையில் இன்னும் மோசமான இடம் தான். வண்டி, வாகனங்களில் செல்லும் போது அதிக கவனமுடன் சென்று வரவும். நீங்கள் செய்யும் அனைத்து முயர்ச்சிகளுமே தடைகளுடன் தொடங்கி பல அலைச்சல்கள் ஏற்பட்டுப் பிறகே வெற்றி கிடைக்கும். அதுபோல் கேது உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்துக்குச் செல்வதால் அரசு வகையில் கெடுபிடிகள் அதிகம் வந்து சேரும். மேலும், பேச்சினால் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள நேரிடும். ஆனாலும் சனி பகவான் சாதகமாக உள்ளதால் இந்த ஆண்டு அவர்களால் உங்களை ஒன்றும் செய்ய இயலாது தான். ஆனால்,வீட்டில் உள்ள பொருட்கள் சனி வக்கிரம் அடையும் காலத்தில் திருட்டுப் போக இடமுண்டு கவனம்.
அடுத்ததாக குரு பகவானை ஆராயும் போது, குரு பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடமான கன்னி ராசிக்கும், 8 ஆம் இடமான சிம்ம ராசிக்கும் இந்த ஆண்டு முழுவதும் மாறி, மாறி சஞ்சாரம் செய்கிறார். அதிலும் பெரும்பாலும் ஆண்டின் பிற்பகுதியில் நிரந்தரமாக 9 ஆம் இடம் செல்கிறார். இதனால் இந்த வருடத்தின் முற்பகுதியை விட பிற்பகுதி அதிக நன்மைகளை உங்களுக்குச் செய்யும். வழக்குகள் அனைத்தும் உங்களுக்கே சாதகம் ஆகும். உங்கள் செல்வாக்கு உயரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் சோதனைகளைக் கடந்து முன்னேறும் ஆண்டாகத் தான் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் யாவும் நிறைவேறும். சிலருக்கு முக்கியப் பொறுப்புகள் கூட கிடைக்கும். எனினும், அதன் காரணமாக வேலைப் பளு அதிகரிக்கும். அரசுத் துறையில் எதிர்பார்த்த லாபங்கள் உண்டு.
வியாபாரிகள்
வியாபாரிகளைப் பொருத்தவரையில் கடந்த காலத்தை விட இந்த ஆண்டு அதிக முன்னேற்றத்தை தரும் ஆண்டாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். ஆண்டின் இறுதியில் புதிய கிளைகளைக் கூட தொடங்கும் வாய்ப்பு உருவாகும். அருமையான வருடமாக உங்களுக்கு இந்த வருடம் திகழும்.
கலைஞர்களுக்கு
கலைத் துறையில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு வந்து சேரும். அரசாங்கத்தால் அங்கீகாரம், கௌரவம் ஆகியவை வந்து சேரும்.
மாணவர்களுக்கு
மாணவர்களைப் பொறுத்தவரையில் இந்தக் கல்வி ஆண்டில் எண்ணற்ற சுப பலன்களை எதிர்பார்க்கலாம். கொஞ்சம் முயற்சித்துப் படித்தால் முதல் மாணவனாகக் கூட தேர்ச்சி பெரும் வாய்ப்பு காணப்படுகிறது. விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு கூட சென்று படிப்பார்கள்.
விவசாயிகளுக்கு
விவசாயத்தில் இருப்பவர்களுக்கு அதிக மகசூல் கிடைக்கும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். கடன்களை அடைப்பீர்கள். அரசு ஆதரவு உண்டு. வழக்கு, விவகாரங்கள் கூட சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு
பெண்களைப் பொருத்தவரையில் உங்கள் செல்வாக்கு உயரும் ஆண்டு என்று தான் இந்த ஆண்டை சொல்ல வேண்டும். புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள் என்றாலும் கேது சாதகமாக இல்லாததால் வீட்டை பத்திரமாகப் பூட்டி விட்டுச் செல்லவும். அதிகம் திருட்டுப் போகும் வாய்ப்பு இந்த ஆண்டு காணப்படுகிறது அதனால் கொஞ்சம் கவனமுடன் இருக்கவும்.
பரிகாரம்
ராகு/கேதுவின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் அருகில் இருக்கும் புற்றுக் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து வரவும். மேலும் சனிக்கிழமைகளில் உங்களால் முடிந்த ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
பொது
அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் கருநீலம்
ராசியான எண்கள் அல்லது தேதிகள் 6,15,24
வணங்க வேண்டிய தெய்வம் மகாலட்சுமி (தாயார் )
ராசியான நிறம் நல்ல வெள்ளை
ராசியான திக்கு தென்கிழக்கு
ஆகாத நிறம் மஞ்சள்
பின் குறிப்பு
இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி, திசை மோசமாக இருந்தால் மேற்கண்ட நல்ல பலன்கள் (கூடவோ, குறையவோ) ஓரளவு பாதிக்க இடம் முண்டு.மேற்சொன்னவை யாவும் ஒரு,ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள், விவரங்கள் கிடைக்கும்.
Discussion about this post