பொதுவாக செடிகளை வீட்டிற்குள் வெளியே தோட்டத்திலேயே வளர்ப்பார்கள். இன்று தொட்டிகளில் வீட்டிற்குள் செடிகளை வளர்க்கிறார்கள். இதனால் அங்கு வசிப்பவர்கள் வளமாக வாழ்வார்கள் என்பது இயற்கையின் நியதியாகும். சுற்றுப்புறத்தில் சக்தியை ஊட்டும் செடிகளை வளர்க்கலாம். செடிகள் உயிர்ச் சக்தியையும் வளரும் சக்தியையும் தருபவை. மனிதன் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகும். பிராண வாயுவைத் தருகிறது. கரியமில வாயுவை கிரகித்து காற்றை தூய்மைப்படுத்துகிறது. வியாபார நிலையங்களில் தொட்டிகளில் செடிகளை வைத்தால் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவார்கள். சுற்றுப்புறச் சூழ்நிலையை சுத்தப்படுத்துகிறது. வெளிச்சமும், சீதோஷ்ணமும் இருக்கும் இடத்தில் செடிகள் நன்றாகவே வளரும். அவ்விதமான இடங்களில் வளர்க்கலாம்.
மலர்ச்செடிகளை கதவிற்கு அருகில் வளர்த்தால் நல்ல சக்தியை உள்ளே கொண்டு வரும். குளியலறையின் குறையை நீக்க அங்கு ஒரு செடியை வைக்கலாம். வேண்டாத முலையை மறைக்கவும் செடியை வைத்து மறைக்கலாம். எடையை கூட்டுவதற்கு கதவிற்கு அருகில் ஒரு செடியை தொட்டியில் வைக்கலாம். வேலை செய்யும் இடங்களில் செடிகளை தொட்டிகளில் அதிகம் வைக்கக் கூடாது. கூர்மையான இலையுடைய செடியை வைக்கக் கூடாது. கற்பூரவல்லி போன்ற செடிகளை தொட்டிகிளில் வைக்கலாம். மருத்துவ குணம் நிறைந்ததாகும். வடக்கு, கிழக்கு சுவரை ஒட்டி செடிகளை வைக்கக் கூடாது. வீட்டிற்குள் வைக்கும் செடிகளின் தொட்டிகள் இரட்டைப் படையில் இருக்க வேண்டும். தென்கிழக்குப் பகுதியில் முட்செடிகள், சிவப்பு மலர்களை கொண்ட செடிகள் இருந்தால் அழிவைத் தரும். மலருடன் இருக்கும் பச்சை நிறத்துடன் வட்ட வடிவமான இலையுடன் இருக்கும் செடிகளே சிறந்ததாகும். ஆண்டு முழுதும் பச்சையாக இருக்கும் மலர்ச் செடிகளை வைக்கலாம். வட்டமான சதைப்பற்றுள்ள செடிகள் செல்வத்தைத் தரும். ஊதா மலர்ச் செடிகளும் வீட்டினுள் வைக்கலாம். குறைந்த வெளிச்சமுடைய பல்புகளுக்கு அருகில் வைத்தால் நன்றாக வளரும்.
வடக்கு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதியில் வீட்டினுள் வைக்கலாம். செடிகளுக்கு பதிலாக அழகான செடிகளின் ஓவியங்களை சுவரில் மாட்டலாம்.
தொழிற்சாலை – வியாபார நிலையங்களின் முன் சிறிய மலர்ச் செடிகளை வைக்கலாம். செல்வம் தரும் பகுதியில் மணிபிளான்ட் வைக்கலாம். புகழ் தரும் பகுதியிலும் வைக்கலாம்.
பசலிக் செடியை மண்தொட்டியில் வைத்து போர்ட்டி கோவில் கட்டி தொங்கிவிடலாம். மல்லிச் செடியையும், முல்லைச் செடியையும் இவ்விதம் வைக்கலாம்.
செடிகளை நன்றாக பராமரிக்க வேணடும். தொட்டிகளில் தினம் தண்ணீர் விட்டு, அதில் அதிகம் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ந்த சருகுகளை உடனுக்குடன அப்புறப்படுத்த வேண்டும்.
Discussion about this post