காயத்ரி மந்திரம் உச்சரித்தால் கிடைக்குமா செல்வம் ?

0
வ்யாசர் பகவான் வேதங்களை அழகாக தொகுத்து ஆதிமூலமான காயத்ரி மந்திரத்தையும் போதித்தார்.

காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பவர்கள் இரண்டு வீதம், ஒன்று சகுன உபாசனன், இரண்டு பிரம்ம உபாசனன்.

பரப்பிரம்மத்தை அடைய வேண்டும் என்றால் தேஜஸாக ஒளியுருகில் காயத்ரியை தியானிக்க வேண்டும். பிரம்மரியத்தை கடைபிடிக்க வேண்டும்.

சராசரி இல்லத்தானாக இருந்தால், காயத்ரியை சகுன உபாசனையாக செய்ய வேண்டும்.

நாம் தினமும் செய்ய வேண்டிய ஐந்து மகாயக்ஞங்கள் இருக்கின்றன. அவைகளை நாம் மறந்து வெகுதூரம் சென்றுவிட்டோம். காரணம், வாழ்க்கை முறை என்கிறோம், இது தவறு.

நாம் தவறான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மற்றவர்களை குறை கூறுகிறோம், இந்த ஐந்து யக்ஞங்களும் இன்றியமையாதவை.
1, தேவ யக்ஞயம்
2, பித்ரு யக்ஞயம்
3, பூத யக்ஞயம்
4, ப்ரம்ஹ யக்ஞயம்

1, தேவ யக்ஞயம் என்பது அக்னியில் ஹோமம் வளர்ந்து அருளினைப் பெறுவது.
2, பித்ரு யக்ஞயம் என்பது ஸ்ரார்த்தம், தர்ப்பணம் செய்து பெரியோர்கள் ஆசி பெறுவது. (தென்புலத்தூர்)
3, பூத யக்ஞயம் என்பது மந்திர பூர்வமாக சமர்பித்து பஞ்ச பூதங்களின் சக்தியை பெறுவது.
4, மனுஷ்ய யக்ஞயம் அதிதிகளுக்கு அன்னமிடுவது மனிதர்களின் அன்பைப் பெறுவது.
5, பிரம்ஹ யக்ஞயம் என்பது வேதம் ஓதுவது, காயத்ரியை ஜபிப்பது போன்றவை. இதை தெளிவாக திருமந்திரத்தில் திருமுல நாயனார் விளக்குகிறார்.
               யாவர்க்குமாம்
               இறைவர்க்கொரு பச்சிலை, யாவர்க்குமாம்
               பசுவுக்கொரு வாயுறை, யாவர்க்குமாம்
               உண்ணும் போதொரு கைப்பிடி
               யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே
திராவிட வழியான தெற்கு வழியாக இருந்தாலும் ஆர்ய வழியான வடக்கு வழியாக இருந்தாலும், மனித குல கடமைகளை மறக்கக்கூடாது என்கிறார்கள் ஆன்றோர்கள்.

இன்றும் காயத்ரி மந்திரத்தை ஜபித்துதான் அர்க்கியம் விடுகிறார்கள். இறைவனுக்கு நிவேதனம் செய்யும் போதும் காயத்ரியைத்தான் ஜபிப்பது வழக்கம். மஹாயக்ஞத்திலும் காயத்ரி மந்திரத்தை சொல்லித்தான் ஹோமம் செய்வது வழக்கம்.

இவைகளையெல்லாம் செய்ய வேணடிய அவசியம், நாம் பூவுலகில் தேவையானவற்றை தேவ சக்தியின் முலம் பெற்று உய்ய வேண்டும் என்ற நோக்குடன் தான்.

தவறு இன்றி நல்ல முறையில் படித்து மனதில் தெளிவான பிறகு உச்சரிக்க தொடங்கவும்.

மெதுவாக வாய் திறந்து உச்சரிக்கலாம் தேவி அருள்தருவாள்.  இது ஒரு வழி முறை.

மவுனமாக தெளிவாக உச்சரித்தால் காயத்ரி தேவி யானவள் அனைத்து பாக்கியங்களையும் தருவாள் மவுனம் தான் சிறந்தது.

பயிற்சி பெற்று கொண்டு பலன் கிடைத்தால், நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களுக்காகவே ………….

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

ஓம்  தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
          தந்தோ தந்தி: ப்ரசோதயாத் – 64 வீதம்

ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ரருபாய தீமஹி
         தந்தஸ்சிவ: ப்ரசோதயாத் – 64 வீதம்


ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே விஷ்ணுபத்னீச தீமஹி
         தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத் – 64 வீதம்

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே கனகதாராயை தீமஹி
         தந்நோ தனலக்ஷ்மீ: ப்ரசோதயாத் – 64 வீதம்

வஸீப்ரதா வாஸீதேவீ
            வாஸீதேவ மநோஹரீ
வாஸவார்சித பாதச்ரீ;  வாஸவாரி விநாசிநீ – 108 வீதம்

காலை கிழக்கு முகமாக உட்கார்ந்து  உச்சரிக்க வேண்டும்


சின்முத்திரையில் கையை வைத்து கொள்ள வேண்டும்

மாலை மேற்கு முகமாக உட்கார்ந்து  உச்சரிக்க வேண்டும்

கையை இறுக்க மூடி, மேல் பார்த்தபடி வைத்து கொள்ள வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here