முருகன் மயிலை தன் வாகனமாக கொண்டதன் காரணம் ?

0

          மயில் தோகை விரித்தாடுகிறது என்றால், மழை வரப் போகிறது எனப்பொருள். மழை பொழிந்தால் உலகம் செழிக்கும். அது மட்டுமல்ல அது தோகை விரித்தாடும் போது “இறைவனே  எல்லாமும்” என்ற பொருளுடைய ஓங்கார வடிவம் தோன்றும். “ஓம் முருகா” என்றால், “எல்லாமே முருகன்” என்று பொருள்படும்.

                          
                         மேலும் மயில் இறகு நோய் போக்கக் கூடியது. இதைக் கொண்டு புண்பட்ட இடத்தை வருடினால் சுகம் ஏற்படும். அது சாதுவானது. இந்த மயில் சூரனின் ஒரு பகுதி முருகன் அசுரகுணம் கொண்டவரையும் திருத்துவாரே தவிர அழிக்கமாட்டார். மனைவியை துன்புறுத்தும் அசுரர்கள் அநேகம் பேர் நாட்டில் உள்ளனர். இந்த அசுரர்களைத் திருத்த பெண்கள் மயில் மீது அமர்ந்த முருகனை உளமாற தரிசித்து கணவரின் அசுரகுணம் மாற பிரார்த்திக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here