முருகன் ஆறுமுகத்தான் என்று அழைப்பர். இவரை “குமாராய நம” எனச் சொல்லி வழங்க வேண்டும். இந்த மந்திரத்தின் எழுத்துக்கள் ஆறு “சரவணபவ” என்ற திருமந்திரமும் ஆறெழுத்து உடையதே. இதை “ஆறு எழுத்து அடக்கிய அருமறை” என்கிறார் நக்கீரர். இவர் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து புறப்பட்டு அவதரித்த போது எழுந்த பொறிகளின் எண்ணிக்கையும் ஆறு. முருகனின் முகமும் ஆறுதான். முருகன் கொலுவீற்றிருக்கும் சந்நிதிகளின் மேல்பகுதி அறுகோணம் உடையதாய் இருக்கும். முருகன் தமிழகத்தில் மிக முக்கியமாக குடியிருந்த தலங்களும் ஆறுதான். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலைமலை ஆகியவையே அத்தலங்கள்.
Discussion about this post