முருகனின் மூன்று சக்திகள்

0
 

        முருகனின் மூன்று சக்திகள் இச்சா சக்தியின் உருவமாக இருப்பவள் வள்ளி. இவள் திருமாலின் மகளான சுந்தரவல்லி என்கிறது புராணம். முருகனின் வலப்புறம் இருப்பாள். வலது கையில் இவள் ஏந்தியுள்ள தாமரை மலர் முருக பெருமானின் கண்ணிலிருந்து வரும் சூரிய காந்தம் பட்டு எப்போதும் மலர்ந்திருக்கும். அமுதசுரபி. ஏயினர், குலோத்துமை, பெண்கள் நாயகம் என்றெல்லாம் இலக்கியம் போற்றும் இவளை வழிபட்டால் இனிய வாழ்வு பெறலாம்.

            அவரது கிரியா சக்தியாக இருப்பவள் தெய்வானை. திருமாலுடைய மகளான அமுத வல்லியே இவள் என்பது புராணம். இவள் முருகனின் இடது பக்கம் இருப்பாள். இவள் தன் கையில் கருங்குவளை மலரை  ஏந்தியிருப்பாள். அம்மலர் முருகப்பெருமானுடைய இடது கண்ணிலிருந்து வரும் சந்திரகலை பட்டு எப்போதும் மலர்ந்திருக்கும். இவளை அமுதமாது, தேவகுஞ்சரி, வேழமங்கை எனப் பல பெயர்களால் அழைப்பார். இவள் பொன் உலகுக்கு உரியவள். இவளை வழிபட்டால் வறுமை நீங்கி வளம் பெறலாம் என்பது நம்பிக்கை.

            முருகனின் கையிலுள்ள வேல் ஞானசக்தியின் அடையாளமாகும். கோடிக்கணக்கான சூரியன் சேர்ந்தால் எவ்வளவு ஒளி கிடைக்குமோ, அந்த அளவு பிரகாசம் இந்த வேலுக்கு உண்டு என்கிறது திருப்புகழ். வேலை வணங்குபவர்களுக்கு “ வாழ்க்கை பொய்யானது ”. இறை இன்பமே “ நிரஙநதர இன்பம் ” என்ற ஞானம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here