திருக்கோயில் பிரசாதங்களில் தெய்வீக சக்தி

0

கத்தோலிக்க பாதிரியார் கண்டுபிடிப்பு

               நமது திருக்கோயில்களிலுள்ள தெய்வ மூர்த்திகளுக்கு ஆகம முறைப்படி படைக்கும் திருமண், திருநீறு, குங்குமம், தீர்த்தம் மற்றும் உணவு பதார்த்தங்களில் தெய்வீக சக்தி கலந்து அருள் பாலிக்கிறது. தெய்வீக சக்தி கலந்த சுவையும், மணமும் வித்தியாசமானதாக இருக்கிறது என்பது அனுபவ ரீதியாக நாம் அறிந்துள்ள உண்மை. அனுபவம் இல்லாதலர்கள் இதை நம்பமாட்டார்கள்.
             அமெரிக்காவை சேர்ந்த சார்லஸ்லெட் பீட்டர் என்ற கத்தோலிக்க பாதிரியார் ஹிந்து சமய சாஸ்திரங்களையும், வழிபாட்டு முறைகளையும் நன்றாக கற்றறிந்து யோகியானவர். ஹிந்து சமயத்தின் யோகா நெறியை பற்றி நூல்கள் எழுதியுள்ளார். அவர் இந்தியாவில் பல வருடங்கள் தங்கியிருந்து பல திருத்தலங்களுக்கு சென்று பலயோகிகளை தரிசனம் செய்து அருளாசி பெற்று யோகியானவர். ஒருமுறை அவர் மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மனுக்கு பூஜை நடைபெறும் போது ஒரு அபூர்வமான சாநித்யம் அங்கே சுழல்வதை கண்டும், உணர்ந்தும் ஆனந்தமடைந்தார். அப்போது அவருக்கு திருநீறு, குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. அதை அவர் தன் யோகசக்தியால் சோதனை செய்து பார்த்த போது அதில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு காந்த சக்தி படிந்திருப்பதை கண்டறிந்தார். மேலும் திருக்கோயில் தீர்த்தங்களிலும் அந்த அபூர்வ சக்தி நிறைந்திருப்பதை உணர்ந்து ஆச்சரியமடைந்தார். இந்த உண்மைகளை அவரே தெளிவுபடுத்தி இந்த மாதிரியான ஒரு தெய்வீக சாநித்யத்தை நான் இந்தியாவில் மட்டுமே கண்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here