புண்ட்ர தாரணம் தொடர் – 6

0
குங்குமம்


           பெண்கள் நெற்றியில்
கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டியது குங்குமம். அது நடுவகிட்டில் சுமங்கலிகளால் அணியப்படுவதும்
உண்டு. வடபாரத மகளிர் இனை ஸிந்தூர் எனச் சிறப்பித்துக் கூறுவர்.
           குங்குமம்
என்கிற செந்நிறத்தூள் (மஞ்சளை மூலதனமாகக் கொண்டு தயாரிக்கப்படுவது). மஹாலட்சுமியை நினைவூட்டுவது.
           மஹாலட்சுமி
வாசம் செய்யும் ஐந்து முக்கிய இடங்களில் ஒன்றாக தலை முடியின் நடுவகிட்டுப் பகுதி கருதப்படுகிறது.
           அதனால் பாரத
தேசம் முழுவதும் மணமான பெண்கள் நெற்றியின் நடுவகிட்டுப் பகுதியில் குங்குமம் அணிகின்றனர்.
           பெண்கள் தினந்தோறும்
நடுவகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்வது அவசியம். நெற்றியில் தினசரி ஸ்டிக்கர் பொட்டு
வைக்கும் பெண்கள் குறைந்த பட்சம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்களில்
நெற்றியில் மங்களகரமான குங்குமத்தையே இட்டுக் கொள்ள வேண்டும். இது அவசியம்.
           ஆண்கள் குங்குமப்
பொட்டு இட்டுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறவர்கள் அறிவிலிகள். அவர்கள் நமது பண்பாட்டுப்
பகைவர்கள் என்பதை உணர வேண்டும். அது போலவே பெண்கள் திருநீறு அணிந்து கொள்வதும் தவறு
என்று எண்ணுபவர்கள் மூடர்கள்.
          நெற்றியில்
விபூதியும், குங்குமமும் அணிவதால் இறைவனிடத்தில் பக்தி உண்டாகும். அன்றாட வாழ்வில்
நல்லது நடக்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது சாஸ்திரம் ஆகும்.
           நிறைவாக ஒன்று…..
           நீறில்லா
நெற்றிப் பாழ்…..
           கோயில் இல்லா
கிராமம் அடவிகாடே…….

         என்பதை உணர்ந்து
நாம் எந்த சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களோ, அந்த சம்பிரதாயத்திற்கு உரிய புண்ட்ரதாரணம்
செய்து கொள்ள கூச்சப்படாமல் துணிச்சலான தன்மானமுள்ள ஹிந்துவாக வாழ்வோமாக………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here