இம்மரத்தை எல்லா சிவன் கோயில்களிலும் காணலாம்.
இதற்கு மேல்நாட்டு தாவர சாஸ்த்திரப்படி – பொட்டான்சியல் “நையிம் – ஈகிள் மார்மெல்ஸ்” என்றும், சமஸ்கிருதத்தில் பில்வம் என்றும், ஆங்கிலத்தில் “பேல் புருட்” என்றும் பெயர்கள் உள்ளன.
சிவார்ச்சனைக்கு முக்கிய பத்ரமாக வில்வம் உபயோகிக்கப்படுகிறது.
வில்வ தளத்தில் திருமகள் வாழ்கிறாள், எனவே வில்வ மரத்திற்கு ஸ்ரீவிருட்சம் என்ற பெயருமுண்டு,
லட்சுமி ஸஹஸ்ர நாமத்தில் “பில்வ நிலயாயை நம’’ என்று வருகிறது,
வில்வ பத்ர பூஜா பலன்
வில்வத்தின் பெரமை சாஸ்திரங்களில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வில்வத்தின் முன்று இலைகள் சிவபெருமான் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும், இறைவனின் முக்கண்ணையும் காட்டுகிற வடிவில் அமைந்துள்ளது.
வில்வத்தினால் இறைவனை அர்சசித்து வழிபடுவது பாவ நீக்கத்திற்கு ஒரு முக்கியமான வழிமுறையாகும்.
வில்வத்தில் லட்சுமி வாசம் செய்வதால் அடியார்கள் செல்வங்களையெல்லாம் இறைவன் திருவடிகளிலேயே அர்ப்பணித்து விட்டு அவன் திருவருளை மட்டுமே வேண்டுகின்ற நிலையை வில்வ இலை அர்ச்சனை காட்டுகின்றது.
வில்வ தளங்களில் அநேக விதம் உண்டு. அவைகள் முன்று, ஐந்து, ஏழு தளங்களாகவும் அமைந்திருக்கும்.
வில்வ மர வகைகளில் ஏழு தளங்கள் கொண்ட மரங்களைப் பார்ப்பது அரிது.
ஒரேயொரு வில்வதளம் மட்டுமே நுறாயிரம் தங்கப் பூக்களுக்குச் சமமானது.
ஒரு வில்வ தளத்தை ஈசனுக்கு அர்ப்பணிப்பதன் முலம் சகல பாவங்களும் நீங்கி, நன்மைகள் யாவும் பெற முடியும். இலை சில மரங்களில் சற்று வட்டமாகவும், சில மரங்களில் நீண்டும் இருக்கும். எவ்விதம் அருகம்புல், வன்னி இலை கணபதிக்கும், துளசி, தாமரை விஷ்ணுவிற்கும், வ்ருக்ஷி கதிர் பச்சை, ஷண்முகனுக்கும், ஜாதி, கரவீரம் தேவிக்கும் பூஜை செய்ய விஷேசமானவைகளோ அவ்விதமே பரமேஸ்வரனுக்கு தும்பை மலர், மந்தாரை மலர், வில்வ பத்ரம் உகந்ததாகும். பிரதோஷ காலத்தில் சிவலிங்கத்தை வில்வம் கொண்டு ருத்ர த்ரிசதி நாமார்ச்சனை செய்வதின் பலனை விஷேசமாக அநேக நுல்களில் கூறப்பட்டிருக்கிறது. காளஹஸ்தி புராணத்தில் இதைப் பற்றி விவரமாகவே உள்ளது.
மந்த்ர சாஸ்த்ரப்படி லட்சுமி கணபதி, த்ரைலோக்ய கணபதி, மோஹன கணபதி, மஹாலட்சுமி யந்த்ரங்களை வில்வ மரப் பலகையில் வரைந்து பூஜிப்பது மஹத்தான பலனைக் கொடுக்கும்
விஷேசமாக அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற 108 வில்வஸுக்தங்களை மஹாசிவராத்ரியன்று மாலையில் சிவ ஸந்நிதியில் சொல்லி அர்ச்சனையோ பாராயணமோ செய்தால் எல்லா இடர்களும் நீங்கி அனைத்து நலன்களும் கிட்டும்.
நியமங்கள்
வில்வ பத்ரத்தைப் பூஜைக்கு க்ரஹிப்பதில் சில நியமங்கள் உண்டு. வில்வத்தை க்ரஹிக்கும் மந்த்ரம் – நமஸ்தே பில்வ தரவே.
துய உடலோடு, சிவ நாமத்தை ஜபித்துக் கொண்டு வில்வ இலைகளை பூஜைக்காக பறிக்க வேண்டும்.
பூமியில் விழுந்த பத்ரம், பூச்சிகள் அரித்தவை, விலை கொடுத்து வாங்கியவை பூஜைக்கு உகந்ததல்ல.
சிவன் கோயிலிலுள்ள வ்ருக்ஷ்த்திலிருந்து தனிப்பட்ட பூஜைக்கு பத்ரம் ஸ்வீகரிக்கக் கூடாது.
பில்வ பத்ரத்திற்கு பழமை, நிர்மால்ய தோஷம் இல்லை.
வில்வ மரம் வளர்ப்பதானால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பெரும் புண்ணியம் கிடைக்கும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். காசி முதல் ராமேஸ்வரம் வரையுள்ள சிவஸ்தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.
வில்வ மரத்தை வீட்டுக் கொல்லைகளின் உட்பாகத்தில் வளர்ப்பது விஷேசமல்ல, ஆயினும் வேலி ஓரங்களில் பயிராக்குவது பாதகமில்லை.
வில்வ தளத்தை மாதப்பிறப்பு, ஸோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது.
மருத்துவப் பயன்கள்
வைத்திய முறையில் சிறந்த முலிகையாகவும், வில்வம் உபயோகிக்கப்படுகிறது. இந்த வேர்பட்டை, மரப்பட்டை, இலை, பிஞ்சு, காய், பழம், பால் கசிந்து பிசின் போன்ற இதன் பலபாகங்கள் வைத்ய முறையில் உபயோகிக்கப்படுகின்றன.
வில்வ பழத்தில் அநேக லோக சத்துகள் உப்பு சத்துகள் போன்றவைகள் நிறைந்து காணப்படுகின்றன.
சற்றுக் கசப்பும், வெடுப்பும் கொண்ட இதன் இலை மிகவும் வீரியம் வாய்ந்த கல்பம் ஆகும்.
காலையில் வெறும் வயிற்றில் ஆரம்பத்தில் முன்று, பின் ஐந்து, ஏழு தளங்களாக மிளகு சேர்த்து உட்கொள்ள வீர்ய விருக்தி உண்டாகும்.
இவ்விதம் யோகிகள் உட்கொண்டு இந்த்ரியத்தை நிக்ரஹம் செய்து கட்டி அதை நேரடியாக நாடி நரம்புகளிலே வியாபிக்கச் செய்து உடல் தளர்ச்சி, நரை, திரை, முப்பு இவைகள் வராமல் தடுத்து இளமையோடு வாழ்கிறார்கள்.
தவிர இதன் பசும் தளிர்களை செப்புப் பாத்திரத்தில் ஜலம் விட்டு ஒரு நாள் ஊறவைத்து அருந்தினால் உடல் வெப்பம், பித்த ஆதிக்ய ரோகங்கள், ஸ்தரீகளுக்கு உண்டாகும் பெரும்பாடு போன்ற வியாதிகள் நீங்கும்.
வில்வ தளங்களை ஜுரகம், சுக்கு, மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குடல் சம்மந்தமான புண்கள், குமட்டல் போன்றவைகள் நீங்கும்.
இதன் இலைச்சாறும், மிளகும் சேர்த்துக் கொடுக்க ஜுரம் குறையும்.
இதன் பழம், கத்தைக் காம்பு, மாதுளைப்பட்டை இவைகளைச் சூர்ணமாக்கிக் கொடுக்க சீதபேதி அதிகாரம் நீங்கும்.
வில்வ பஞ்சகம் என்று கூறப்படும் வில்வப் பழம், இலவம் பிசின், மாங்கொட்டைப் பருப்பு, ஜாதிக்காய் அபின் சேர்த்துச் சூரணமாக்கி 20 அரிசி எடை அளவில் கொடுக்க நாள்பட்ட சீதபேதி நீங்கும்.
இதன் பிஞ்சிற்கும் இவ்விதக் குணமுண்டு.
வில்வப் பழத்திற்கு மலத்தை இளக்கும் குணமுண்டு.
இதன் காயை வெயிலில் உலர்த்தி நெருப்பில் சுருக்கி, உப்பு சேர்த்து பல்பொடியாக உபயோகிக்க பல் ஈறுகளில் வீக்கம், ரத்தம் சீழ் உண்டாதல், பல்வலி ஆகியவற்றை நீக்கும்.
வில்வ வேர் 30 பலம் எடுத்து இடித்துச் சூரணம் செய்து ஜலத்தைக் காய்ச்சி வடிகட்டி, வெல்லம் 30 பலத்தை பாகு செய்து அத்துடன் கலந்து அதில் சுக்கு 3 பலம், மிளகு 4 பலம் திப்பிலி 2 பலம், செவ்வியம் தாளிச பத்திரி வகைக்கு 1 பலம், காக கேசரம் 1/2 பலம், திப்பிலி முலம் 2 பலம், சித்ர முலம் 2 பலம், த்ரிஜாதம் வகைக்கு 1/4 பலம், ஜுரகம் 2 பலம் – இவைகளை பொன் முறுவலாக வறுத்துச் சூரணம் செய்து சேர்த்து நெய்கூட்டி லேகியமாக தேன் சேர்த்துக் கிளறி லேகியத்தைக் காலை, மாலை கழஞ்சிக் காய் அளவு உட்கொள்ளின் அஜிரணம், பசி இல்லாமை வாந்தி, காமாலை, குண்மம், பாண்டு, ரோகம் போன்றவைகள் நீங்கும்.
வில்வ வேரைத் துளாக்கி, ஜலத்திலிட்டுக் கஷாயமாகக் காய்ச்சி அருந்திவரில் இந்திரியம் வ்ருத்தியாகும். போக சக்தியையும், தேஜஸையும் கொடுக்கும்.
வில்வத்தின் இக, பர நன்மைகள் உணர்ந்து தகுந்த முறையில் பயன்படுத்தி வாழ்வை வளப்படுத்திக் கொள்வோமாக.
Discussion about this post