ஓம் எனும் ப்ரணவம்

0
1.  ஓம் எனும்
ப்ரணவம்
ஓங்காரமே உலகின்
முதல் ஒலி, எழுத்துக்களின் முதலாய் விளங்குவதும் ப்ரணவமே.
நமது தெய்வங்களின்
முல மந்திரங்களை உச்சரிக்கும் போது அவற்றை ஓங்காரத்தில் தொடங்கிச் சொல்வதாலேயே அதற்குரிய
பலன் கிட்டும்.
இந்த ப்ரபஞ்சம்
சப்த அலைகளில் உருவானது. சப்த ப்ரும்மமாக விளங்குவது ஓங்காரம். நாத ப்ரும்மமும் இதுவே.
அகரம் உகரம் மகரம்
முன்றும் இணைந்ததே ப்ரணவமாகிய ஓம்.
ப்ரணவத்தின் குறியீடு.
இது எல்லா மொழிகளுக்கும் முதன்மையானது. அனைத்து மொழிகளுக்கும் சொந்தமானது.
இந்த ஸம்ஸ்க்ருத
வடிவம் என்று பலர் தவறாக எண்ணுகின்றனர்.
+ (ப்ளஸ்) என்ற
குறியீடு எப்படி எந்த மொழிக்கும் உரியது அல்லவோ அங்ஙனம் இந்த பரம் பொருளின் பொதுக்
குறியீடு.
இதனை தமிழில் ஓம்
என்று எழுதுவர். நாத பிந்துவான ஓங்காரம் ஒளியும், ஒலியும் இணைந்தது. ப்ரணவம் ஐந்து
கூறுகள் கொண்டது.
அகரம், உகரம், பிறை,
பிந்து என்பவையே அவை.
ப்ரணவத்தின் மஹிமையை
மாண்டுக்கிய உபநிஷதம் தெளிவாக விரிவாகக் கூறுகிறது.
‘’ஓம் இத் யேததக்ஷரமிதம்
ஸர்வம்” என்றும்,
”பூதம், பவத், பவிஷ்யதிதி
ஸர்வம் ஓங்கார ஏவ” என்றும் தொடக்கத்தில் முதல்வரியிலேயே இந்த உபநிஷதம் தெளிவாகிவிட்டது.
அதாவது அனைத்துமே ஓங்காரம் தான்.
கடந்த காலம், நிகழ்காலம்,
எதிர்காலம் ஆகிய முன்று காலங்களுமே ஓங்காரத்தில் அடங்குகிறது.
யோகியரின் செவிப்புலனில்
ஸதாகாலமும் ரீங்கரித்துக் கொண்டிருப்பது இந்த ப்ரணவ நாதம்.
பகவான் கீதையில்
”அக்ஷராணாம் அகாரோஸ்மி” என்று கூறுவதிலிருந்தே இந்த ஓங்காரத்தின் முதல் கூறாகிய அகரத்தின்
பெருமை விளங்குகிறது.
ஜாக்ருத. ஸ்வப்ன,
ஸீஷீப்தி. துரிய அவஸ்தைகளை விளக்கும் ஒலிவடிவமே ப்ரணவம்.
இந்த ப்ரணவ வடிவையே
ஹிந்துக்கள் தங்கள் உபாஸனைக்குரிய சின்னமாக ஏற்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர்
கூறியுள்ளார்.
ஊர்தோறும் ஓர் கோயில்
அமைக்க வேண்டும். எந்த ஸம்ப்ரதாயத்திற்கும் உரிய கோயிலாக இல்லாமல் அனைத்து ஸம்ப்ரதாயத்தினரும்
ஏற்கும் ஓம் என்ற சின்னத்தை மாத்ரம் கொண்டதாக அது அமைய வேண்டும். ஏனெனில் ஓம் என்பது
அனைத்து ஹிந்து சமுதாயப் பிரிவினரும் ஏற்கும் மிக உயர்ந்த சின்னமாகும்.

ஓங்காரத்தை
ஏற்காத யாருமே ஹிற்துவாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் தங்களை ஹிந்து என அழைத்துக்
கொள்ளும் தகுதியை இழந்து விடுவார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here