பித்ருக்களை வழியனுப்புவது எப்படி?

0

இவ்விதம் மஹாளய பட்சம் பதினைந்து நாட்களும் பூஜித்த பிறகு மஹாளய அமாவாசை அன்று விஷச பூஜை செய்து நம்மை ஒரு பொருட்டாகக் கருதி இப்பூவுலகிற்கு எழுந்தருளி நம்முடன் அந்தப் பதினைந்து நாட்களும் தங்கி, நமக்கு  அருள்புரிந்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறி அவர்களுக்கு பாத பூஜை செய்து (பெரியவர் ஒருவர் முலம் நன்றி கூறி அம்மகாபுருஷர்களையும், அவர்களது தேவியரையும்(மனைவி) வழியனுப்பி வைக்கிறோம். அவர்களும் தாங்கள் வந்த தங்கமயமான விமானத்திலேயே சூரியனின் கிரகணங்கள் வழியாக தங்களது நல்லுலகிற்குச் செல்கிறார்கள், ஆதலால் மஹாளய பட்சம் என்ற மகத்தான புண்ணிய அளவற்ற நற்பலன்களைத் தேடித் தருகிறது.



சிரத்தையுடன் மஹாளய பட்சத்தை அனுஷடிப்பவர்கள் குடும்பங்களில் எத்தகைய துன்பமானாலும் நொடியில் தீர்ந்து அந்தக் குடும்பம் செழிப்தை அனுபவத்தில் காணலாம். மஹளய பட்சத்தில் செய்யும் பித்ருக்கள் பூஜை இறைவனின் திருவுள்ளத்திற்கும் உகப்பானது. எக்காரணத்திலாவது இந்தப் பதினைந்து நாட்கள் பூஜையைச் செய்யாமல் விடுபவர்கள் எளிதில் கிட்டாத ஓர் அரிய நல்வாய்ப்பினை இழந்துவிடுகிறார்கள்.


திருமணம் தடைப்படுதல், கடன் தொல்லைகள், குடும்ப சச்சரவுகள், தீராது எனத் தீர்மானிக்கப்பட்ட நோய்கள் ஆகியவை மஹாளய பட்ச பித்ரு பூஜைகளால் அடியோடு நீங்கும். ஆதலால் பரம பவித்ரமான இந்தப் பூஜையை வாசக அன்பவர்கள் அனைவரும் செய்து பயனடைய வேண்டும்.


புறத்திற்கும் திதி தற்பணங்களைச் செய்ய மக்கள் கூடும் இடம் ஸ்ரீரங்கம் காவேரிக் கரையில் அமைந்த அம்மா மண்டபம். இதுவரையில் வாழ்க்கையில் பார்த்திராத அளவுக்கு மக்கள் மஹாளய அமாவாசை அன்று கூடியது தங்களுடைய எழுத்தக்களால் தான். காலை முதல் மாலை வரை திருவிழா மாதிரிக் கூட்டம்.  எள் விழுந்தால் எண்ணெய் ஆகிவிடும் என்பார்களே அதுபோல், ஒவ்வொரு மஹாளய அமாவாசை அன்றும் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் இரண்டாயிரத்திற்கும் குறையாமல் இரு சக்கர வாகனங்கள் இது மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான கார்களில் வந்தவர்கள், ரிக்ஷ,  ஆட்டோ, பஸ், கால்நடையாக வந்தவர்கள் என்று ஆயிரக்கணக்கானோர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here