இராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்!

0
இராமர் பாலம்! இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அதற்கு நமது தஞ்சை பெரியக்கோவில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி கட்டப்பட்டது என பலவன அறிந்து வைத்திருப்போம். ஆனால், அந்த கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? எண்ணற்ற அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது இராம சேது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை, தொடர்ந்து படியுங்கள்…
நாசா கூறும் விளக்கம்

நாசா விண்வெளி மூலம் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படத்தை0க் கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக கூறுவது, இராம பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல. மற்றும் இது வெறுமென கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் தான் இராம சேது. என கூறியிருக்கிறார்கள்
இராமாயணம் சொல்வது உண்மை

இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் இராமர் பாலம் இடம் பெற்றுள்ளது. அதனால் இராமாயணம் சொல்வது உண்மை தா
உபயோகத்தில் இருந்த இராம சேது
இராம சேது கட்டமைக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது. கடந்த 1480 கி.மு.வில் கடலில் ஏற்பட்ட ஒரு சூறாவளியினால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 கி.மு.விற்கு முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.
மனிதர்களால் கட்டப்பட்டதா?
இராம சேதுவில் ஆராய்ச்சி மேற்கொண்ட பல புவியியலாளர்கள், இராம சேது இயற்கையாக உருவானதல்ல இது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது தான் என கூறுகின்றனர். இராமாயணம் மட்டுமல்லாமல் மற்றும் பல கூற்றுகள் இதை உண்மை என தான் சொல்கிறது.
மிதக்கும் கற்கள்
மிதக்கும் கற்கள் பற்றிய கூற்றுகள் இன்னும் மர்மமாக தான் இருக்கிறது. இது நலா மற்றும் நீலின் கைகரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர்.
தொடக்கமும், முடிவும்
இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதாட்ட 1௦ மீட்டர் ஆழம் மட்டுமே இங்கு கடலின் ஆழம் உள்ளதாய் கூறுகின்றனர்.
இராம சேதுவின் அளவு
இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இராம சேது பாலம் என கூறப்படுகிறது. இதை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடித்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம் தான்
இராம சேது பாலத்தின் வயது
அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது இராம சேதுவின் வயது 17 லட்சம் ஆண்டுகள்!!!
ஐந்தே நாட்களில்
வெறும் ஐந்தே நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நலா என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி கட்டிமுடிக்கப்பட்டது இராம சேது பாலம்.
ஆதாம் பாலம்
இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இது இராவணனிடம் இருந்து சீதையை மீட்க இராமர் செல்லும் போது அவர் கடல் கடந்து செல்ல வானரங்களின் உதவியோடு கட்டப்பட்ட பாலம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here