மனதைக் கவரும் உறவுகள்

0




                   உறவு ஒன்றைக் கவர்ந்திழுக்க நீ்ங்கள் விரும்பினால், உங்களுடைய
எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் ஆகியவை உங்களுடைய விருப்பத்தோடு
முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

             உங்களுடைய முதற்கவனமும் முழுக்கவனமும் உங்கள் மீதே இருக்கட்டும்.
உங்களை நீங்களே நிரப்பிக் கொள்ளாவிடில், மற்றவர்களுக்குக் கொடுக்க உங்களிடம் எதுவும்
இருக்காது.
உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் அன்பும் மரியாதையும் செலுத்தும்
நபர்களை நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்.

                நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக உணரும்போது, அன்பைத் தடுக்கிறீர்கள்.
அதோடு, உங்களைத் தொடர்ந்து அந்நிலையிலையே வைத்திருக்கும் நபர்களையும் சூழல்களையும்
கவர்ந்திழுக்கிறீர்கள்.
உங்களிடம் நீங்கள் நேசிக்கும் குணங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களிடம்
இருக்கும் மேலும் அதிகமான சிநப்புகளை ஈர்ப்பு விதி உங்களுக்கு காட்டும். 

             ஓர் உறவு சரியாகக் செயல்பட வேண்டும் என்றால், அடுத்தவரிடம் நீங்கள்
மெச்சும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவர்களுடைய குற்றங்குறைகள் மீது அல்ல. அவர்களிடம்
உள்ள வலுவான அம்சங்களில்கவனம் செலுத்தினால், அவற்றை மேலும் அதிகமாக நீங்கள் பெறுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here