ஏராளமான மக்கள் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது, ’நான் என் வாழவில் எப்படி அதிகமான பணத்தைக் கவர்ந்ததிழுப்து ? செல்வத்தையும் செழிப்பையும் பெறுவது எப்படி ? நான் நேசிக்கும் வேலையில் இருந்து கொண்டே என் வீட்டுக் கடனை என்னால் அடைக்க முடியுமா ? ஏனெனில் என் வேலை மூலமாக எனக்கு வரக்கூடிய பணத்திறகு ஓர் உச்ச வரம்பு இருக்கிறதலல்லவா ? எப்படி அதிகமான பணத்தைக் கவர்ந்திழுப்பது ?
ஒரே வழி பிரபஞ்சத்திடம் விண்ணப்பிப்பது நாம் இரகசியத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்திற்கு மீண்டும் போகலாம், பிரபஞ்சத்தின் பொருட்பட்டியலில் இருந்து உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்பது மட்டும்தான் உங்கள் வேலை, அதில் பணமும் ஒன்றாக இருந்தால், எவ்வளவு வேண்டும் என்று கேளுங்கள். அடுத்த ஒருசில நாட்களுக்குள் ஒரு கோடி ரூபாய்கள் எதிர்பாராத வருவாய் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்று கேளுங்கள். அல்லது, அது நீங்கள் விரும்பும் வேறு எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அது உங்களைப் பொறுத்தவரை நம்பக் கூடியதாக இருக்க வேண்டும்.
உங்களுக்குப் பணம் வரக்கூடிய ஒரே வழி, தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைதான் என்று உங்களிடம் ஓர் எண்ணம் ஏற்கெனவே இருந்தால் அதை முதலில் தூக்கி எறியுங்கள். தொடர்ந்து அந்த எண்ணங்களைக் கொண்டிருந்தால் எந்த விதமான அனுபவங்கள் கிடைக்கும் என்பது
உங்களுக்குத் தெரியும்தானே ?
அற்புதம் உங்களுக்காகக் காத்து கொண்டிருக்கிறது என்பதையும் பணம் எப்படி வரும் என்ற கேள்வியைக் கேட்பது உங்களது வேலையில்லை என்பதையும், இப்போது புரிந்து கொள்ளத் துவங்கியிருப்பீர்கள், உங்களது வேலை, கேட்பது, நம்புவது, பெறுவது, மகிழச்சியான மனநிலையில் இருப்பது மட்டும் தான். அவை எவ்வாறு நிகழப் போகின்றன என்ற விபரங்களைப் பிரபஞ்சத்திடம் விட்டுவிடுங்கள்.
Discussion about this post