அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இறைபக்தியா ?

0


                காலை,மாலை கோயில் செல்பவர்கள் உண்டு. மாலை
மட்டும் ஆலயம் செல்பவர்கள் உண்டு, ஏதேனும் விஷேச காலமா? திருவிழாவா? அப்போது மட்டும்
ஆலயம் செல்பவர்கள் உண்டு. ’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’. என்று ஔவை கூறினாள். ’கோயில்
அமையாத ஊரில் குடியிருக்க வேண்டாம். என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். ஆலயம் போவதும்
வணங்குவதும் நம் தலையாய கடமைகளில் ஒன்று. ஆனால் வேலை சுமைகள் அதிகம். உண்ண, உறங்க கூட
போதிய நேரம் கிடைப்பது இல்லை…… என புலம்புவோர் உண்டு. ஆகாரம் உண்ணாமல் ஒருவேளை இருப்பவர்களும்,
கடவுள் இல்லை என்று கூறுபவர்களும், ஆண்டவனை ஒருநாள், ஒருவேளையாவது நினைக்காமல் இருப்பதில்லை.
அவனே அனைத்தும் என்று சரண்புகுவோம்.
           என்னிடம் தொலைபேசியிலும், நேரிலும் பலருக்கு
பல நடப்பு திசையிலுள்ள அத்திசைக்குரிய வழிபாடுகளை செய்ய சொல்கிறேன். செய்கிறவர்கள்
பல பிரச்சனைகளிலுருந்தும் விடுபடுவதுடன் அதிக நம்பிக்கை இறைபக்தி தான் அதிக முக்கியத்துவம்
வாய்ந்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here