“ஓம் நமோ நாராயணாய”
என்ற மன்னன் , இதை கடைபிடித்து வந்தார், அவர் கோபக்காரரான துர்வாச முனிவரையே அடக்கி
வைக்கும் பாக்கியத்தைப் பெற்றான், இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் செல்வத்துடனும் வைகுண்டத்திற்கே
செல்வார்கள் என்பது ஐதீகம்.
ஏகாதசி விரதத்தை விடவும் மிக சிறந்தது துவாதசி விரதம். இந்த நாள் ஏகாதசிக்கு அடுத்து
வரும் நாள் துவாதசி. அம்பரீஷ மகரிஷி என்பவர் இதை கடைபிடித்தவர். ஏகாதசியை விட துவாதசி
விரதம் இருப்பது எளிதல்ல.
கடைபிடிக்கலாம். சாப்பிடாவிட்டால் துாக்கம் வராது. அதிலும் இரவு சாப்பாடு இல்லை
என்றால் அறவே துாக்கம் வராது. குத்துப்பட்டவன் கிடந்தாலும்
குறை வயிற்றுக்காறன் கிடக்க மாட்டான் என்று கிராமத்து பழமொழியே உண்டு. ஆம் காலியான
வயிறுள்ளவனுக்கு துாக்கம்
வருவதில்லை.
விரதம் கடைபிடிக்க வேண்டும். சாப்பிடாமல் இருப்பதால் துாக்கமும் வராது என்பதால் இந்த
விரதத்தை எளிமையாக கடைபிடித்து விடலாம். ஆனால் துவாதசியன்று சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். ஆனால் அன்று பகலில் துாங்கக்
கூடாது. முதல் நாள் ஏகாதசியன்று பட்டினியோடு துாங்காமல் இருப்பதால் , மறுநாள் சாப்பிட்டவுடனையே
அசதியில் கண்ணை கட்டிவிடும். அவ்வளவு தான் குறட்டைவிட்டு விடுவார்கள், ஏகாதசி விரதமிருந்தவர்கள்
மறுநாள் சாப்பிட்டவுடன் பகலில் துாங்கி விட்டால்
விரதத்தின் பலன் போய்விடும் என்பது சாஸ்திரம்,
இந்த விரதத்திற்கு ஒரு பலன் உண்டு. யார் ஒருவர் பசுவை காலால் எட்டி உதைக்கிறாரோ , அவரது
குடும்பம் , “கல்லும் மண்ணும் திட்டாகும் ………” என்ற பழமொழிக்கிணங்க அழிந்துவிடும்.
அந்த
வீட்டில் குழந்தையின்றி போதல், பெண்கள் வாழாவெட்டியாய் திரும்புதல் போன்றவை நடந்தால் அங்கே பல தோஷம் இருக்கிறது என்று புரிந்து
கொள்ளலாம். ஆ னால் . அதுவோ மிகவும் கடுமையானது. பராசர ஸ்மிருதி என்ற நுாலில் சொல்லப்பட்டுள்ள
அந்த பரிகாரத்தைக் கேளுங்கள்.
நல்ல நாளில். நதி அல்லத கடல் உள்ள கோயிலுக்குச் சென்று புனித நீராட வேண்டும். தசமி,
ஏகாதசி ஆகிய இரண்டு நாட்கள், தொடர்ந்து சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். துாங்கக்
கூடாது. துவாதசியன்று காலை 6:00 மணிக்குள்
சாப்பிட்டு விட வேண்டும். அன்று பகலில் கீதை,
வைகுண்ட புராணம், ராமாயணம், மகாபாரதம் படித்துக் கொண்டிருக்க வேண்டும். படிக்கத் தெரியாதவர்கள்
கேட்கவாவது வேண்டும். மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லவோ கேட்கவோ வேண்டும். இரவு
9:30 மணிக்கு மேல் தான் துாங்க வேண்டும்.
ஒன்று மாறினாலும் பசுவை மிதித்த குற்றத்துக்கு பிராயசித்தமே கிடையாது, எனவே ஒன்றை புரிந்து
கொள்ளுங்கள், பசுவை பாதுகாப்பது நமது கடமை. அதை பராமரிக்க வேண்டுமே தவிர இம்சை செய்து
விடாதீர்கள்.
Discussion about this post