தெற்கும் ,மேற்கும் சாலை சந்திக்கும் தென்மேற்கு மனை

0
         தெற்கும் ,மேற்கும் சாலை சந்திக்கும் தென்மேற்கு மனை.இதில் ஆண்,

பெண் இருபாலருக்கும் சராசரி வாழ்க்கை அமையும்.சில தென்மெற்கு

மனைகளில் வீடுகட்டி பின்னர் விற்பனை செய்யும் நிலை உருவாகும்.

தலைவன் தலைமகன்,தொழில் ரீதியிலும், உடல் ரீதியிலும் பிரச்சினைகள் உருவாகும், தலைமகன் வெளியே குடியிருக்க நேரிடும்.பெண்கள் ஆண்களை விட அதிகாரம் காட்டும் குணம் உருவாகும்.தாய் தந்தையின் பேச்சை கேட்காமல் திருமணம் செய்வார்கள்,வெளியூர்களில் இந்த வீட்டில் உள்ள ஆண்கள் வசித்தால் அவர்களுக்கு பாதிப்பு குறைந்த நிலை உருவாகும்.தங்கள் இனத்தில் உறவு இல்லாதவர்களை மணம் முடிப்பார்கள்,சிலருக்கு கலப்பு திருமணம் செய்யும் நிலை உருவாகும்.சுமாரான வசதியில் உள்ளவர்கள் இந்த வீட்டிற்கு மணமகனாக வருவான்.
         இந்த மனையில் தெருப்பகுதியில் வியாபார கடைகள் அமைத்து கொண்டு பின்பாகத்தில் வீடு அமைத்துக் கொண்டால் நன்மை பெறலாம்.குடியிருக்கும் கட்டம் மட்டும் அமைந்த இதுபோன்ற மனையில் வாழ்பவர்கள்  மதம் மாறும் மனநிலை,குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய் தாக்கம்,இரவு நேரத்தில் கெட்ட கனவு,சலங்கை ஓசை,உருவ நடமாட்டம் இது போன்ற நிலைகள் அனுபவ ரீதியில் நடைபெறும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை.மேலும் இந்த கட்டிடத்தில் அல்லது வீட்டில் வாழும் உறவினர்களுக்கு சிறிய குறைபாடுகள் ஏற்படும்,மதம் மாறும் நிலை போன்ற எண்ணங்கள் அல்லது பல நிலைகளில் சிந்தனைகள் ஓடும்.
           இதற்கு ஒரே வழி மட்டும் தான் உள்ளது.முடிவெட்டும் கடை,கிளினிக், மளிகைக் கடை இது போன்ற வியாபார கடைகள் வீட்டின் முன்னால் வாடகைக்கு கொடுத்தால் உரிமையாளருக்கு நன்மை தரும்.
           பல நோய்கள்,பல தொல்லைகள் வாஸ்துவால் தீர்வு காண முடியும்,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here