ஜாதகங்களில் லக்கினத்திலிருந்து 2,4,7,8,12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும்.இதை சந்திர லக்னம் (ராசி),சுக்ரன் இருக்கும் இடங்களிலிருந்தும் கணிக்கப்படவேண்டும் என்று ஜோதிட ங}ல்கள் கூறுகின்றன.மூன்று முறையிலும் தோசமிருப்பின் மிக கடுமையான தோசம் என கூறும் நூல்களும் உண்டு.இருப்பினும் லக்கினத்திலிருந்து கணிப்பதற்கே முழுமையான தோச பலனிருக்கிறது.இதிலும் 7,8 மிக கடுமையான தோசம், 4 கடுமையான தோசம், 12 தோசம் ,2 குறைவான தோசம் எனவும் சிலர் வரையறக்கின்றனர்.
– 4 இல் செவ்வாய் கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரவும்,சுகவாழ்வு இல்லாமல் வாழ்நாள் முழுவதும் போராட்டங்களை சந்திக்கக்கூடியதாகவும், பிறந்த வீட்டு ஆதரவு இல்லாமலும் இருக்க இடமுண்டு.
– 7 இல் செவ்வாய் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவும் , பிரிவும் ,இரத்த சம்பத்தப்பட்ட போன்ற அனுகூலமற்ற பலன்கள் நடைபெற இடமுண்டு.
8 இல் செவ்வாய் சிறு வயதிலேயே வாழ்க்கைத் துணையை இழக்க அல்லது பிரிய நேரும்.திடீரென உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொள்ளலாம்.எதிர் பாராமல் விபத்தில் சிக்கலாம்.இல் வாழ்வில் நிம்மதி இருக்காது.உஸ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவும் இடமுண்டு.
– 12 இல் செவ்வாய் பாத ரோகமும், பண விரயமும், உடன் பிறந்தவர்களால் தொல்லையும் ஏற்படக்கூடும். பூரண கட்டில் சுகம் கிடைக்க இடமில்லை.
எனவே செவ்வாய் தோசம் உள்ள பெண்ணிற்கோ, ஆணிற்கோ செவ்வாய் தோசமுள்ள ஆணையோ,பெண்ணையோ தான் திருமணம் செய்து வைக்க வேண்டும்.இதனால் தோசம் நீங்கி சந்தோசமாக வாழ்வார்கள். திருமணத்திற்கு முன் உங்கள் குடும்ப ஜோதிடரின் அறிவுரையின் பெயரில் உரிய பரிகாரம் செய்வது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.