கோயில் என்பது ‘கோ’ மற்றும் ‘இல்’ ஆகிய இரு சொற்கள் சேர்ந்து உருவானது. அதாவது ‘கோ’ என்றால் இறைவன் (அரசன் என்றும் பொருள்படும்), ‘இல்’ என்றால் இல்லம். எனவே இறைவன் வாழும் இல்லம் என்ற அர்த்தத்தில் கோயில் என்றானது. அதேபோல ‘ஆன்மா லயப்படுகின்ற இடம்’ என்ற பொருளில் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் ஆன்மாவை லயப்படுத்தி கொண்டிருக்கும் கோயில்கள் தமிழகத்தில் நிறைய உள்ளன.
வைகுந்தப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
வைகுந்தப் பெருமாள் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் உள்ள “ஆயிரங்கால் மண்டபத்தை” காண ஆயிரக்கணக்கான பக்தர்களும், பயணிகளும் வந்து செல்கின்றனர். இத்தூண்கள் ஒவ்வொன்றிலும் வேவ்வேறு சிலைகள் செதுக்கப்பட்டு, ஒவ்வொரு தூணும் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.
நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.
சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை “வன்மிகிநாதர்” என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது
Discussion about this post