திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் இன்று(நவ.,20) மாலை 4: 30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி கடற்கரையில் நடந்தது.
திருச்செந்தூர் சுப்பரிமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா 15ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையை தொடர்ந்து, பூர்ணாஹூதி தீபாராதனை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
விழாவில், இன்று மாலை 4:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. கடற்கரையில் வழக்கமான இடத்திற்கு பதில், கோயிலுக்கு அருகிலேயே கடற்கரையில் நிகழ்ச்சியை நடத்தப்பட்டது. உற்சவர் ஜெயந்திநாதனர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய நிலயில் சூரனை வதம் செய்யும் வேல், பூஜைகள் செய்யப்பட்டு சஷ்டி மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து, யானை முகம் கொண்ட தாரகாசூரன், சிங்கமுகசூரன் ஆகியோரை வதம் செய்த பின், முருகப்பெருமான், இறுதியாக சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சூரசம்ஹாரம் நிறைவு பெற்ற பின், வள்ளி, தெய்வானையுடன், முருகப்பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.
Discussion about this post