ஐந்து ரூபாய் நாணயங்களை கொண்டு குபேர பூஜை செய்வது நல்லது

0

வருகிற 14-ம் தேதி சனிக்கிழமை தீபாவளி வருகிறது.தீபாவளி என்றால் புத்தாடைகள். பட்டாசு, பலகாரம் என வீட்டுக்கு வீடு களை கட்டும். அதோடு எல்லா வீடுகளிலும் இறைவனை பூஜிப்பதும் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. தீபாவளி என்பது நரகாசுரனை, கிருஷ்ண பரமாத்மா அழித்த கதையை மையமாக வைத்து கொண்டடப்படுகிறது. எல்லோருமே இதனை ஒரு மகிழ்ச்சித் திருவிழாவாகத்தான் நினைக்கிறார்கள் அது மட்டுமல்ல. தீபாவளியன்று நாம் செய்யும் சிறப்பு பூஜைகளால் வீட்டில் செல்வச் செழிப்பும் ஏற்படும் என்பது பல பேருக்குத் தெரியாது.
தீபஒளித் திருநாளான தீபாவளியன்று கடைப்பிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் பல உள்ளன. அன்று அதிகாலை எழுந்து அதாவது காலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் “கங்கா ஸ்நானம்” செய்ய வேண்டும்.தலையில் நல்லெண்ணெய் தேய்த்து வென்னீரில் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் லட்சுமியும்,குளிக்கும் வென்னீரில் கங்கையும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால்தான் இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர் வந்தது. இதன் பின்னர் புத்தாடைகளை அணிய வேண்டும்.
இதன் பின்னர், வீட்டில் உள்ள சாமி படங்களின் முன்னால் பலகாரங்களை வைத்து காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தீபாவளி பூஜையை செய்ய வேண்டும்.தொடர்ந்து உணவருந்தி,பட்டாசு வெடித்து தொலைக்காட்சி பார்த்து இனிமையாக பொழுதைப் போக்கலாம்.மாலை வரை இது தொடரட்டும்.
மாலையில்தான் நீங்கள் முக்கிய பூஜையை மேற்கொள்ள வேண்டும். அதுதான் லட்சுமி குபேர பூஜை. வீட்டில் சகல செல்வங்களும் வந்து குவிவதற்கான விசேஷ பூஜை இது. மாலை 5.30 மணி முதல்7.30 மணி வரை இதற்குறிய நல்ல நேரமாகும். பூஜையறையில் மகாலட்சுமி, குபேர பகவான் ஆகியோரது படங்களை மலர்களால் அலங்கரித்து, மஞ்சள், குங்குமம் இடவேண்டும்.
வாழை இலையில் நவதானியங்கள் வைக்க வேண்டும். மேலும், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, குங்குமம் இட்டு இலையின் வலதுபக்கம் வைக்க வேண்டும்.
வினாயகர், லட்சுமி, குபேரர் ஆகியோரது படங்களுக்கு கற்பூர தீபாராதனை காட்டி “குபேராய நமஹ, தனபதியே நமஹ” என மந்திரம் துதித்து உதிரிப்பூக்கள் தூவி வழிபட வேண்டும். காய்ச்சிய பசும்பால், வாழைப்பழம், பாயசம் ஆகியவற்றை நைவேத்யம் செய்யலாம்.
குபேர பகவானுக்கு உகந்த எண் 5 ஆகும். எனவே, ஐந்து ரூபாய் நாணயங்களை கொண்டு குபேர பூஜை செய்வது நல்லது 5 ரூபாய் நாணயங்களை தட்டில் வைத்து, அதனை கைகளால் எடுத்து வினாயகர், லட்சுமி, குபேரர் பாதம் தொட்டு மீண்டும் தட்டிலேயே போட வேண்டும். தீபாவளியன்று செய்யும் இந்த சடங்குகளால் வீட்டில் உள்ள பணக் கஷ்டம் நீங்கி, செல்வம் பெருகி, வாழ்வில் புதிய ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here