திருமலையில் நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்சவம், நேற்று காலை தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது.ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலையில், நவராத்திரி பிரம்மோற்சவம், கடந்த, 16ல் துவங்கியது.
இந்த எட்டு நாட்களும், காலை, மாலை என, இரு வேளைகளிலும் வாகன சேவைகள், வசந்தோற்சவம், புஷ்பக விமானம் என, பல்வேறு சேவைகளுடன்
நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்சவம், ஒன்பதாம் நாளான நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமி மற்றும் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட உற்சவமூர்த்திகள், கண்ணாடி மண்டபம் முன் ஏற்படுத்தப்பட்ட தங்க சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டனர். பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. சக்கரத்தாழ்வாருக்கு மண்டபம் முன் ஏற்படுத்தப்பட்ட சிறிய குளத்தில், தீர்த்தவாரி நடத்தப்பட்டது.
Discussion about this post