கேரளாவின் புகழ்பெற்ற பத்பநாப சுவாமி கோவில் 5 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்.,23ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதையடுத்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் இன்று முதல் மீண்டும் பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் தீபாரதனை முடியும் வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பக்தர்கள் வழிபாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு விண்ணப்பத்தின் காபியையும் ஆதார் கார்டையும் கோவிலுக்கு வரும் போது கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு முறையும் 35 பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நாளைக்கு 665 பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க உதவி செய்ய வேண்டும் இவ்வாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Discussion about this post