பகவான் கிருஷ்ணர் அவதரித்த மதுராவில், ஜென்மாஷ்டமிக்கு சில மாதம் முன்னதாகவே வேலைகள் தொடங்கி விடும்.
பகவான் கிருஷ்ணரை அலங்கரிக்கும் துணிகளை தயாரித்தல், எம்ப்ராய்டரி வேலைகள், அலங்கார பொருட்களை தயாரித்தல், என ஆயிரக்கணக்கானவர்கள் மிகவும் பிஸியாக இருப்பார்கள். வருமானம் செழிக்கும்.
வெளிநாடுகளில் இருந்து கூட ஆர்டர்கள் குவியும். வருமானம் செழிக்கும்.
கிருஷ்ணரை அலங்கரிக்கும் பொருட்களை தயாரிக்கும் பணியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக இந்த வருடம் நிலைமை தலைகீழாக உள்ளது.
வழக்கமான வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவியும் eன்ற கூறிய அந்த பணியில் உள்ளவர்கள், இந்த முறை ஒன்றுமே வரவில்லை என கூறுகின்றனர்.
வழக்கமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து சுமார் 5 கோடிக்கான ஆர்டர்கள் வரும் என்கிறார்கள். போக்குவரத்து இல்லை என்பதால், ஆர்டர்களும் இல்லை.
ஜன்மாஷ்டமி என்றால் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வருமானம் பார்போம், ஆனால், இந்த முறை வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. கிருஷ்ணருக்கு உடைகளை தைப்பதற்கு பதிலாக மாஸ்குகள் தைத்து கொண்டிருக்கிறோம். அதிலும் போதிய வருமானம் இல்லை என வருத்தப்படுகின்றனர் அங்குள்ளவர்கள்.
Discussion about this post