அடுத்த இலக்கு காசி மற்றும் மதுராவை விடுவிப்பதில் அகில் பாரதிய அகாரா பரிஷத் அறிவிப்பு

0
ராமர் கோவிலுக்கு பின்னர் காசி மற்றும் மதுராவை விடுவிப்பதில் கவன் செலுத்த போவதாக ஏபிஏபி என்றைழைக்கப்படும் அகில் பாரதிய அகாரா பரிஷத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில் பாரதிய அகாரா அமைப்பின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீண்ட கால போராட்டத்திற்கு பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை செய்யப்பட்டிருப்பது ஆறுதலையும் பெருமையையும் தருகிறது. இதற்காக பாடுபட்டவர்களின் தியாகங்கள் பலனளித்துள்ளன.
இதனையடுத்து எங்களின் அடுத்த இலக்கு காசி மற்றும் மதுராவை விடுவிப்பதில் கவனம் செலுத்துவோம். இந்துக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு இடங்களை விடுவிப்பதற்காக ஒரு இயக்கத்தை தொடங்குவது குறித்து விவாதிக்கப்படும். கிருஷ்ணரின் ஜென்ம பூமியை விடுவிப்பதற்காக 14 மாநிலங்களை சேர்ந்த 80 பேர் கொண்ட கிருஷ்ண ஜன்மபூமி அறக்கட்டளை மதுராவில் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு இடங்களையும் மீட்பதற்கான போராட்டம் சனாதன தர்மத்தின் முறையில் அரசியல் அமைப்பின் உட்பட்டே அனைத்தையும் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
மேலும் ஏபிஏபி பொது செயலாளர் ஹரிகிரி கூறுகையில் ராம ராஜ்யத்தை ஸ்தாபிப்பதில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு புதிய விடியல் கிடைக்கும் எனவும் சனாதன் தர்மத்தை நம்புபவர்களுக்கு இது பெருமைக்குரிய விசயம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here