புதிய இந்தியாவின் புதிய ஆரம்பமாகியுள்ளதாக ராமர் கோயில் பூமி பூஜையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: ராமர் கோவிலின் கனவு நிறைவேறும் முன் பல தலைமுறைகள் கடந்துவிட்டன. இதற்கான நீண்டநாள் காத்திருப்பு 5 நூற்றாண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் புரிதல் மற்றும் முயற்சிகள் காரணமாக, தீர்மானம் இன்று நிறைவேற்றப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கனவை நிறைவேற்றியதற்காக பிரதமரை பாராட்டுகிறேன். இன்றைய நாள் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: ராமர் கோவிலுக்காக பலர் தியாகம் செய்தார்கள். சிலர் இங்கு வரமுடியவில்லை. பாஜ., மூத்த தலைவர் அத்வானி தனது வீட்டில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருப்பார். கொரோனா காரணமாக சிலரை அழைக்க முடியவில்லை. உலகம் ஒரு குடும்பம் என்பதை நம் நாடு நம்புகிறது. இன்று ஒரு புதிய இந்தியாவின் புதிய ஆரம்பமாகியுள்ளது.
கோயில் கட்டுமானத் தீர்மானத்தை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ்., போன்ற எண்ணம் கொண்ட அமைப்புகள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் உழைத்தன. அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் பாலாசாகேப் தியோரஸ், ‛நாம் இதற்காக 20 முதல் 30 வருடங்களுக்கு போராட வேண்டியிருக்கும்,’ என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது, நாங்கள் 30 ஆண்டுகளாக போராடினோம், 30வது ஆண்டில், எங்கள் தீர்மானத்தை நிறைவேற்றிய மகிழ்ச்சியை நாங்கள் அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
Discussion about this post