ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்ற பிரதமர் மோடி, ஹனுமன்கர்கி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கடவுள் ராமர் பிறந்த இடத்திலும் சென்று வழிபாடு நடத்தினார்.
உச்சநீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்த அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடக்கிறது. இதற்காக சிறப்பு விமானம் மூலம் லக்னோ வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றடைந்தார். அங்கு, அவரை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதன் பின்னர் இருவரும் ஹனுமன்கார்கி கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதன்பின்னர் கடவுள் ராமர் பிறந்த இடத்திற்கு சென்று பூஜை செய்து வழிபாடு நடத்தினார். இதன் பின்னர், மரக்கன்று நட்டு வைத்து, தண்ணீர் ஊற்றினார்.
Discussion about this post