அயோத்தி ராமர் கோவில் திருப்பணி பூமி பூஜையில் சமர்பிக்க, கோவையில் இருந்து ஸ்ரீராம நாமம் மந்திர தொகுப்பு அனுப்பப்படுகிறது.கோவையில், ‘ஸ்ரீ ராம மந்த்ரா’ அமைப்பு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில், 1,008 கோடி ‘ஸ்ரீராம நாமம்’ எழுத பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்காக ஒரு நோட்டு புத்தகத்தில் ஒரு லட்சம் எண்ணிக்கையிலான, ‘ஸ்ரீ ராமநாமம்’ எழுதுவதற்கேற்ப தயாரித்து பக்தர்களிடம் வினியோகிக்கப்பட்டது. ஆண்டு தோறும் சீதாராமர் பட்டாபிஷேகத்தை, கோவையில் நடத்தி அதில் ஸ்ரீ ராமபக்தர்களை பங்கேற்க செய்தனர்.நாடு முழுவதும் உள்ள பக்தர்கள், 900 கோடி ஸ்ரீராம நாமம் எழுதி சமர்பித்தனர்.
இதில், ஐந்து லட்சம் எண்ணிக்கையிலான ஸ்ரீராம நாமம் எழுதிய புத்தகங்கள், ஆக., 5ல் அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி ஆலய திருப்பணி பூமி பூஜையில் சமர்பிக்கப்பட உள்ளன.இதற்காக, தேக்குமரத்திலான பேழை தயாரிக்கப்பட்டு, அதில் பக்தர்களால் எழுதிய, ஐந்து லட்சம் ‘ஸ்ரீராமநாமம்’ நோட்டு புத்தக தொகுப்பு பட்டு வஸ்திரங்களால் சுற்றி வைக்கப்பட்டது. மந்திர தொகுப்பை, ‘வேதவாக்கு’ இதழாசிரியர் ராஜகோபாலனிடம் கோவை, ‘ஸ்ரீராம மந்த்ரா’ அமைப்பு நிறுவனர் கோபிநாத், மாருதி நற்பணி மன்றத் தலைவர் பாலசுப்ரமணியன் சமர்ப்பித்தனர்.
அயோத்தி ராமர் கோவில் திருப்பணி பூமி பூஜையில் சமர்பிக்க, கோவையில் இருந்து ஸ்ரீராம நாமம் மந்திர தொகுப்பு அனுப்பப்படுகிறது.கோவையில், ‘ஸ்ரீ ராம மந்த்ரா’ அமைப்பு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில், 1,008 கோடி ‘ஸ்ரீராம நாமம்’ எழுத பக்தர்களுக்கு அழைப்பு. pic.twitter.com/G6XOJ9LlQg
Discussion about this post