ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறும் விழாவுக்கு முன்னதாக மூன்று நாள் நீளமான வேத சடங்குகள் நடைபெறும். பின்னர் பிரதமர் 40 கிலோ வெள்ளி செங்கலை அடிக்கல் நாட்டுவார்.
அயோத்தியில் அமையும் ராமர்கோயிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ள நிலையில், அது குறித்து உ.பி., முதல்வர் யோகி. ஆதித்யநாத் நேரில் ஆய்வு செய்தார்.
அயோத்தியில் அமையும் ராமர்கோயிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ள நிலையில், ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறும் விழாவுக்கு முன்னதாக மூன்று நாள் நீளமான வேத சடங்குகள் நடைபெறும். பின்னர் பிரதமர் 40 கிலோ வெள்ளி செங்கலை அடிக்கல் நாட்டுவார்.
அது குறித்து முதல்வர் யோகி நேரில் ஆய்வு செய்தார். pic.twitter.com/7nlRQnCYMN
— AthibAn Tv (@AthibAntv) July 25, 2020
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்ற அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ராமர் கோயில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு பூமி பூஜைக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு 10 நாள் உள்ள நிலையில் இன்று உ.பி முதல்வர் அயோத்தி சென்ற யோகி, ராமர்கோயிலில் உள்ள லஷ்மண், பாரத் மற்றும் ஷத்ருகன் சிலைகளை புதிய இடங்களில் அமைக்க நடத்தப்பட்ட பூமிபூஜையில் பங்கேற்றார்.
1988-ல் வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அப்போது கோவிலின் உயரம் 141 அடி உயரமாக வடிவமைக்கப்பட்டிருந்ததை தற்போது 20 அடி உயர்த்தி 161 அடியாக்கியுள்ளனர். pic.twitter.com/DvRjPvCc4G
— AthibAn Tv (@AthibAntv) July 25, 2020
இதன் பின்னர், ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் உறுப்பினர்கள், நிர்வாகிகளுடனனும் , ஜீயர்களுடனும் யோகி ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் அனுமன் கார்கியில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
இதனை தொடர்ந்து, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்படும் இடத்திற்கு சென்ற யோகி, அங்கு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், இந்த விழாவில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும். அயோத்தி மக்களின் 500 ஆண்டு கால கனவு நனவாக உள்ளதாக கூறினார்.
ராம ஜென்ம பூமி வளாகத்தில் நடைபெறும் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட 200 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறும் விழாவுக்கு முன்னதாக மூன்று நாள் வேத மந்திரங்கள் முழங்க சடங்குகள் நடைபெறும். பூமி பூஜையின் போது கோயில் கருவறை அமையும் பகுதியில் 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை அடிக்கல்லாக மோடி நடுவார்.
யோகி அவர் கூறுகையில், இந்த விழாவில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும். அயோத்தி மக்களின் 500 ஆண்டு கால கனவு நனவாக உள்ளதாக கூறினார். pic.twitter.com/mgcH6zvEjM
— AthibAn Tv (@AthibAntv) July 25, 2020
1988-ல் வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அப்போது கோவிலின் உயரம் 141 அடி உயரமாக வடிவமைக்கப்பட்டிருந்ததை தற்போது 20 அடி உயர்த்தி 161 அடியாக்கியுள்ளனர். கூடுதலாக இரண்டு மண்டபங்கள் அமைக்க உள்ளனர். கோவில் பணிகள் முடிவடைய மூன்று ஆண்டுகள் ஆகும் என கூறியுள்ளனர்.
Related
Discussion about this post