அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 3 அல்லது, 5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், அறக்கட்டளை தலைவர், மஹந்த் நிருத்யா கோபால், அயோத்தியில் நேற்று கூறியதாவது:அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடந்த, ஆகஸ்ட் 3 மற்றும் 5 தேதிகளை தேர்வு செய்துள்ளோம். இரண்டுமே சிறந்த நாட்களாக உள்ளன.
துவக்கவிழாவில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பிரதமரின் வசதியை பொருத்து, 3 அல்லது, 5ம் தேதியில் அடிக்கல் நாட்டப்படும்.கோவில் கட்டுமான பணி துவக்க விழாவை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடத்த விரும்பிவில்லை.நிகழ்ச்சிக்கு, பிரதமர் நேரிடையாக வருவார் என, எதிர்பார்க்கிறோம். விழாவில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத்துக்கும், அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Discussion about this post