”கோவில்களை திறந்து பக்தர்களை, ‘இ – பாஸ்’ முறையில், தரிசனம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்,” என, ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: உலக மக்கள் அனைவரும், வீட்டில் இருந்தபடியே தினமும், ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை, 108 முறை ஜெபம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய கொரோனோ தானாக ஓடிவிடும். திருப்பதி போல தமிழகத்திலும், ‘இ – பாஸ்’ வழங்கி, அரசு விதிமுறைகளின்படி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், ஆடிப்பூர தேரோட்டம் நடத்த வேண்டும். கோவில்களை திறப்பதில் அறநிலையத்துறை மாற்றங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு ஜீயர் கூறினார்.
Discussion about this post