ஜூன் 9-ல் சபரிமலை கோயில் திறப்பு ஆலோசனையில் தேவசம் போர்டு

0
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ...

‘சுவாமி சிலைகளை தொடக் கூடாது; பிரார்த்தனை பாடல்கள் பாடக் கூடாது; பிரசாதம் கிடையாது’ என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வழிபாட்டு தலங்களை, நாளை மறுநாள் முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் ஜூன் 9-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகைளை அமல்படுத்துவது குறித்தும், கோயில்களில் எத்தனை பக்தர்களை அனுமதிப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கோயிலுக்குள் வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here