கொரோனா தொற்று காரணமாக மாநிலஅரசு வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை தடை செய்தது. தற்போது மத்திய மாநில அரசுகள் 5-ம் கட்ட ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி நாளை (4ம் தேதி ) முதல் குருவாயூர் கோவில்களில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருமணம்செய்து கொள்ள குருவாயூர் கோவிலுக்கு மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதன்படி கோவில் நிர்வாகம் மாவட்ட கலெக்டருடன் கலந்து ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்து இருப்பதாவது: ஒரு நாளைக்கு அதிகபட்சம் 60 திருமணங்களை நடத்தலாம். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையில் திருமணம் நடத்திக்கொள்ளலாம். இதற்கான முன்பதிவு உடனடியாக துவங்குகிறது.
மேலும் திருமணம் செய்து கொள்பவர்களின் புகைப்படத்துடன் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவஅதிகாரிகளின் சான்றிழதல் உள்ளிட்டவை சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து மணமகன், மணமகள் அழைத்து வரும் போட்டோகிராபர்களுக்கு அனுமதி கிடையாது தேவஸ்வம் போட்டோகிராபர்கள் பணியில் அமர்த்தப்படுவர். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் திருமணத்தை முன் பதிவு செய்து கொள்ளலாம். திருமண விழாவில் பங்கு கொள்பவர்கள் அனைவரும் கோவிட் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என தேவசம் போர்டு தலைவர் தெரிவித்து உள்ளார்.
Discussion about this post