மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம், உற்சவர் சன்னிதியில், இன்று (மே 4) காலை, 9:05 முதல், 9:30 மணிக்குள் நடக்கிறது.
சித்திரை திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது. கொரோனா ஊரடங்கால், திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருக்கல்யாணத்தை மட்டும் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி, இன்று நடக்கும் திருக்கல்யாணத்தை, கோவில் இணையதளத்தில் www.maduraimeenakshi.org காணலாம். இதேபோல, அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில், சித்திரை திருவிழா ரத்தான நிலையில், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில், மே 8ல் நடக்கிறது.
Discussion about this post