ஸ்ரீநகர்: அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அமர்நாத் பனிலிங்க யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது.
இதுவரை இந்தியாவில் 20,178 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 645 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 3-ஆம் தேதி வர நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பரவலின் காரணமாக அமர்நாத் பனிலிங்க யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பிரதேச நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தச் செய்தி தெரிவிகபட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 3ம் தேதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post