நாகர்கோவிலில் நேற்று நடை பெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், இம்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற் றும் அதிமுக நிர்வாகிகள், பொது மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
எல்லைகள் மறுசீரமைப்பு குழு வின் பணி நிறைவடைந்தவுடன், நாகர்கோவில் நகராட்சி, மாநக ராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விழாவில் பேசிய, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்கு வரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர் கோவில் நகராட்சியை மாநகராட்சி யாக தரம் உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தார்.
அதுபோல, கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம், விமான நிலைய திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண் டும் எனவும் பொன்.ராதாகிருஷ் ணன் கோரிக்கை வைத்தார். ஆனால், இவ்விரு கோரிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி எதுவும் பேசவில்லை.
Discussion about this post