இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில்கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்று தான்சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின்காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்குகட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ,நகரமாகவோ, மலை மீதோ எங்குவேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வடதென் துருவ காந்த அலை எங்கு அதிகமாகஉள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும்.
முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும்.சரியாகச் சொல்வதெனில்இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்றபிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும்.
முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும்.சரியாகச் சொல்வதெனில்இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்றபிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும்.
இந்தஇடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச்செதுக்கி புதைக்கப்படும்.
இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்தஅலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவேஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையைவலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்தஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்தஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இவ்வாற்றல்அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இதுஅறிவியல் பூர்வமான உண்மை.
மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும்மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும்.மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்பஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசைபக்தர்களின் மனதினை அலைபாய விடாமல்ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக்குறைக்கும்.
மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்லஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனிதகாந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின்சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிறபொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரைதீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிக அதிகமானகாந்த சக்தியுள்ளது. அத்தீர்த்தத்தினை தாமிரப்பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இது பற்சொத்தைமற்றும் சளி, இருமல் மற்றும் வாய் துர்நாற்றத்தினைப் போக்கவல்லது. இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களை குணப்படுத்தியுள்ளார்கள்.மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமானசக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச்சொன்னார்கள்.
ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்தகோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச்சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்துகொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணைமுட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்துஅவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில்வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்தகோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச்சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்துகொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணைமுட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்துஅவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில்வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”.
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று”
என்றமுன்னோர்களின் பொன் மொழிகள்
இதன் பயன்கருதி கூறியவை.
ஆகம விதிப்படி கோயில்நிர்மாணித்து,
அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்துகொண்டிருக்கிற கோயில்களில் உள்ளகோபுரங்களின் மேல் தங்கத்தாலும்,செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனதுகூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர்சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியைகிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம்உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு,உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு,நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.
இதனால் தான் “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று முன்னோர்கள் கூறினர்.
கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளகலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்துகலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்குஇடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்தசக்தி பீடத்தின் அடியில் உள்ளதங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்டமந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்துதான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்பபீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.
சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்தசக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.
இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டுவிஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார்.இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14,000போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள்தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல்அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்தசக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாகவெளியேற செய்கிறது.
அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாகவெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கிகொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீபஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்திதூண்டப்பட்டு – கைகளை இணைத்து , மேலேஉயர்த்தி வணங்கும்போது – கை விரல்கள் வழியேஅந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.
இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவிமனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ளபிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும்போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்குதிசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியேசெல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்திவெளிப்படுகிறது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவதொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும்நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்துகண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்தசில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்திபரவுகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டுகொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கேசெல்லக்கூடாது.
சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும்.சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம்செய்யும் போது கைகள் சிலைக்கு மேல்செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறுகாலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிம்வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள்இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்தகூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின்அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.
Discussion about this post