மகரம் ராசி பலன் 2017

0
மகரம் 
களங்கமில்லாத பேச்சிற்கு சொந்தக்காரர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். தைரியம் கூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, மனை வாங்குவீர்கள். புறநகர் பகுதியில் இருக்கும் சொத்தை விற்று நகரத்தில் வீடு, மனை வாங்கும் சூழல் உண்டாகும். உங்களுடைய ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் செவ்வாய் சென்றுக் கொண்டிருப்பதால் மனஇறுக்கங்கள் நீங்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். இளைய சகோதர வகையில் அலைச்சல்கள் இருந்தாலும் மூத்த சகோதர வகையில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் யோகாதிபதியான சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் கூடி வரும். விருந்தினர், உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வாகனத்தை மாற்றவீர்கள். சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். செல்வாக்கு ஒருபடி உயரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். உங்கள் யோகாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் யாவும் நிறைவேறும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். உங்களின் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால் சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும். புது முதலீடு செய்து, புது தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். காதலும் இனிக்கும். கல்வியிலும் வெற்றி உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குருபகவான் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். வேலையாட்களும் ஒத்தாசையாக இருப்பார்கள். உத்யோகத்தில் மகிழ்ச்சி உண்டு. புது பொறுப்புகளை உங்களை நம்பி மூத்த அதிகாரிகள் தருவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கலைத்துறையினரே! தெலுங்கு, கன்னடம் நிறுவனத்திலிருந்து பெரிய வாய்ப்புகள் வந்து சேரும். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுவதாகவும், எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களையும், அதிர்ஷ்டங்களையும் தருவதாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here