பிறர் நிழலில் வாழ விரும்பாதவர்களே! உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்ரன் சென்றுக் கொண்டிருப்பதால் சமயோஜித புத்தியால் முன்னேறுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வெளிமாநிலத்தில், அயல்நாட்டிலிருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வீர்கள். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் பலம் எது, பலவீனம் என்பதை உணரக் கூடிய வாய்ப்புக் கிட்டும். உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பிள்ளைகளால் மதிப்பு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும் வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகள் எதிர்பார்த்தபடி அவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளும் கூடி வரும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த நெருடல்கள் நீங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். 13ந் தேதி வரை உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சனியும், குருவும் சாதகமாகயில்லாததால் செலவுகள் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு உண்டாகும். கடன் பிரச்னையை நினைத்தும் அவ்வப்போது வருந்துவீர்கள். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! கோபம் குறையும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். அண்டை மாநிலத்தில் வேலைக் கிடைக்கும். கேது 3-ல் நிற்பதால் வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடு செய்வீர்கள். அதேப் போல விளம்பர யுக்திகளையும் கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உயரதிகாரிகள் உங்களுடைய திறமையை பரிசோதிப்பார்கள். கலைத்துறையினரே! சக கலைஞர்கள் மதிப்பார்கள். வேற்றுமொழி கலைஞர்களால் புதிய வாய்ப்புகள் கூடி வரும். தொலை நோக்குச் சிந்தனையாலும், விடாமுயற்சியாலும் சாதிக்கும் மாதமிது.
Discussion about this post