விருச்சிகம்
தளராத தன்னம்பிக்கையாளர்களே! குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஏழரைச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். நண்பர் வீட்டு திருமணம், சீமந்தத்தை சிறப்பாக நடத்துவீர்கள். ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்வது நல்லது. மற்றவர்களுக்காக ஜாமீன் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். அதேப் போல எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. சுக்ரன் சாதகமாகயிருப்பதால் வீடு கட்டுவது, வாங்குவது போன்றவற்றில் இருந்து வந்த தடைகள் விலகும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தள்ளுபடி விற்பனையில் புது வாகனம் வாங்குவீர்கள். 13ந் தேதி வரை ராசிக்கு 5-ல் சூரியன் நிற்பதால் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரும். அவர்களின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். அடிவயிற்றில் வலி வந்துப் போகும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் குழப்பங்களும், தோல்வியும் வந்துப் போகும். தகுதியில்லாதவர்களை தரமானவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருந்தாலும் வழக்கமான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவுக் கிடைக்கும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு பாராட்டுகள் குவியும். ரசிகர்கள் வட்டம் அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறும் மாதமிது.

Discussion about this post