துலாம்
மனித நேயத்துடன் உதவுபவர்களே! 13ந் தேதி வரை உங்கள் பாதகாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வாக்குக் கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அரசாங்கத்திடமிருந்து புது சலுகைகளும் பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். உங்களுக்குள் இருந்து வரும் தாழ்வுமனப்பான்மை விலகும். முன்கோபத்தையும் குறைத்துக் கொள்வீர்கள். உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் 6-ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க மறைந்துக் கிடப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சாதாரணப் பிரச்னைகளுக்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொண்டிருக்காதீர்கள். உன் சொந்தம்-என் சொந்தம் என்று மோதிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. உறவினர்கள் எது சொன்னாலும் அதை பெரிதாக்கிக் கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வாகனப் பழுது வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆனால் உங்களுடைய ராசிக்கு சப்தமாதிபதியான செவ்வாய் பகவான் 10-ந் தேதி வரை 7-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்கள் இருவருக்குள் குழப்பத்தையும், பிரச்னைகளையும் உண்டாக்குபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பூர்வீக சொத்துப் பிரச்னைகளும் சுமூகமாக முடிவடையும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். ஏழரைச் சனி நடைபெறுவதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டிலேயே குரு தொடர்வதால் வருங்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! கல்வியும் இனிக்கும். காதலும் கனியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது வாடிக்கையாளர்கள் அமைவார்கள். உத்யோகத்தில் வீண் பழி வரும். வேலைச்சுமை அதிகமாகும். அதிகாரிகள் உங்களுடைய கடின உழைப்பை புரிந்துக் கொள்ள மாட்டார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டிய மாதமிது.

Discussion about this post