மிதுனம் ராசி பலன் 2017

0

மிதுனம்
கலகலப்பானவர்களே! சனிபகவான் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஹிந்தி, மலையாளம், தெலுங்குப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். தைரியம் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். ராகு 3-ம் வீட்டில் நிற்பதால் முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளை பாக்யம் கிட்டும். வீடு, மனை வேண்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை வரவேற்பார். மனைவிவழி உறவினர்களாலும் உதவிகள் உண்டு. சொந்த ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குரு 4-ல் நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், கை, கால் வலி, அசதி, சோர்வு வந்து நீங்கும். முறையான அரசாங்க அனுமதியின்றி வீடு கட்ட தொடங்க வேண்டாம். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடிவடையும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். செல்போன், லேப் டாப் புதிதாக வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! சின்ன சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறும் மாதமிது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here