ரிஷபம்
ரசிப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களே! இந்த மாதம் முழுக்க உங்களுடைய சுகாதிபதியான சூரியனும், ராசிநாதன் சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். புது பதவிகளும், பொறுப்புகள் தேடி வரும். வேலைக் கிடைக்கும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். சிலர் சொந்தமாக முதலீடு செய்து தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு 5-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ராகு 4-ல் நீடிப்பதால் தாயாரின் ஆரோக்யத்தில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், முதுகு, மூட்டு வலி வந்துப் போகும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுதாக வாய்ப்பிருக்கிறது. தாய்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். 11-ந் தேதி வரை செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று நிற்பதால் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். திடீர் பயணங்கள் உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். என்றாலும் கண்டகச் சனி நடைபெறுவதால் சின்ன சின்ன விவாதங்களும், மனைவிக்கு இடுப்பு வலி, மாதவிடாய்க் கோளாறு, ஹார்மோன் பிரச்னைகள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். உங்களின் கற்பனைத் திறன் வளரும். மாறுபட்ட அணுகுமுறையாலும், அனுபவ அறிவாலும் பழைய சிக்கல்களிலிருந்து விடுபடும் மாதமிது

Discussion about this post