மேஷம் ராசி பலன் 2017

0
மேஷம் 
முற்போக்குவாதிகளே! 10-ந் தேதி வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும். தடைகள் நீங்கும். சகோதரங்களுக்குள் ஒற்றுமை பலப்படும். முன் பணம் கொடுத்து பத்திரப்பதிவு செய்யப் படாமல் இருந்த சொத்திற்கு மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். இந்த மாதம் முழுக்க பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். மகனுக்கு அயல்நாடு சென்று உயர்கல்வி பெற வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்னைகள் வந்துப் போகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்ரன் செல்வதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். உங்களுடைய புதிய திட்டங்களுக்கு மனைவி உதவுவார். உங்களுடைய குறை, நிறைகளை சுட்டிக் காட்டி உங்களை நல்வழிப்படுத்துவார். அதை நீங்கள் ஏற்றுக் கொள்வது நல்லது. வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீடு மாறுவீர்கள். வாகனப் பழுது நீங்கும். ராசிக்கு 6-ல் குரு மறைந்துக் கிடப்பதால் ஏதோ ஒன்றை இழந்ததைப் போல அவ்வப்போது இருப்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட நம்பிக்கை துரேகமான செயல்களை நினைத்து வருந்துவீர்கள். கன்னிப் பெண்களே! உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். காய், கனிகளை உண்பது நல்லது. நண்பர்கள் விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியும் கிட்டும். புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். கலைத்துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். நிம்மதியையும், மன தைரியத்தையும் தரக் கூடிய மாதமிது.






LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here