பசுவின் உடலில் எல்லா தேவர்களும் வந்து தங்கிவிட்டனர். லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து இடம் கேட்க நீ சஞ்சல குணம் உள்ளவள். மேலும் இங்கு எல்லா இடமும் முடிந்முவிட்டது. மலஜலம் கழிக்கும் இடம் மட்டுமே உள்ளது என கோதேவி கூற, லட்சுமியும் அந்த இடத்தையாவது தனக்கு அருளும்படி வேண்டிப் பெற்று தங்கினர்.
எனவே தான் காலையில் எழுந்தவுடன் பசுவின் பின் பக்கத்தைத் தரிசிக்க வேண்டும். அதனால் லட்சுமியைத் தரிசித்த புண்ணியம் ஏற்படும். மேலும் அந்த இடத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டால், கங்கையில் நீராடிய புண்ணியமும் ஏற்படும்.
பசுவின் பாதத்துளி மேலே பட்டால் வாயவ்ய ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும். தேவர்கள், முனிவர்கள், புண்ணிய நதிகள், சமுத்திரங்கள் பசுவின் உடலில் இருப்பதால் பசுவை வலம் வந்து வணங்கினால் பலன் ஏற்படும்.
பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம் செய்வதால் பெருமாள் கோயிலில் விஸ்வரூப தரிசனத்தின் போது பெருமாளின் சந்நிதி நோக்கி பசுவின் பிருஷ்டபாகம் இருக்கும்படி செய்து, பகவானும் மகாலட்சுமியைப் பார்த்துக் கொள்வது போலச் செய்கிறார்கள்.
“ கோ பிராமனேப்ய சுபமஸ்து நித்யம்
லோகா சமஸ்தா சுக்னோ பவந்து ”
என்ற சுலோகத்தின் படி, பசுவை அதிகாலையில் பார்ப்பதும் வணங்குவதும் புண்ணியமாகும்.
Facebook Comments Box