Home Aanmeegam தின பலன்… Daily Horoscope in Tamil…. இன்று உங்கள் ராசி பலன்…. Rashi Palan…

தின பலன்… Daily Horoscope in Tamil…. இன்று உங்கள் ராசி பலன்…. Rashi Palan…

0

  

15-04-2021, சித்திரை 02, வியாழக்கிழமை, திரிதியை திதி பகல் 03.27 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.

கிருத்திகை நட்சத்திரம் இரவு 08.32 வரை பின்பு ரோகிணி.

நாள் முழுவதும் மரணயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

கிருத்திகை விரதம்.

முருக வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00

மேஷம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். வியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபம் பெறலாம்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் அன்புடன் பழகுவார்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர்கள் அறிமுகம் கிட்டும். தொழிலில் பணியாட்கள் தங்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினை குறையும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். இதுவரை வராத வெளிக்கடன்கள் இன்று வசூலாகி மகிழ்ச்சி அளிக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தி
ல் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உங்களுக்கு உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் இழுபறி நிலை உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு வியாபார ரீதியாக நெருக்கடிகள் நிலவும். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பெற்றோரின் ஆதரவு கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here