வரலட்சுமி பூஜை செய்ய ஏற்ற நேரம் மற்றும் மந்திரங்கள்: வழிபாட்டுச் செய்முறை இதோ!

வரலட்சுமி விரதம் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இந்த விரதம் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையில் விழுகின்றது. இதன் சிறப்பம்சம், அது பௌர்ணமி தினத்துடன் கூடிச் சேரும் என்பதாகும். வரலட்சுமி பூஜை செய்வதற்கான பல சுப நேரங்கள் உள்ளன (Varalakshmi Pooja Timings 2025). காலை, பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் எந்த நேரத்திலும் இந்த நற்காலங்களில் பூஜை செய்து மகத்தான பலன்களை பெறலாம்.

சுப நேரங்கள்

காலை நேர பூஜைக்கான நேரங்கள்:

  • காலை 5:46 மணி முதல் 6:53 மணி வரை (சுக்கிர ஹோரை)
  • காலை 6:29 மணி முதல் 8:46 மணி வரை (சிம்ம லக்னம்)
  • காலை 8:12 மணி முதல் 9:16 மணி வரை (சந்திர ஹோரை)

பகல் நேரத்தில் பூஜை:

  • பகல் 12:30 மணி முதல் 1:30 மணி வரை (சுக்கிர ஹோரை) – இது மிக முக்கியமான நேரமாகக் கருதப்படுகிறது
  • பிற்பகல் 1:00 மணி முதல் 3:13 மணி வரை (விருச்சிக லக்னம்)

மாலை நேர பூஜை:

  • மாலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை (சுக்கிர ஹோரை)
  • மாலை 7:11 மணி முதல் 8:50 மணி வரை (கும்ப லக்னம்)

மகாலட்சுமி மூல மந்திரம்:

வரலட்சுமி பூஜையின் போது கீழ்க்கண்ட மகாலட்சுமி மூல மந்திரத்தை உச்சரிக்கலாம்:ஓம் ஸ்ரீம் க்லீம் மகாலட்ச்மீ மகாலட்ச்மீ ஏய்யேஹி ஏய்யேஹி சர்வ ஸௌபாக்கியம் மே தேஹி ஸ்வாஹா


லட்சுமி காயத்ரி மந்திரம்:

ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்


அஷ்டலட்சுமி அருள் தரும் மந்திரங்கள்:

அஷ்டலட்சுமிகளின் அருளைப் பெற, பின்வரும் மந்திரங்களை உரைப்பது சிறப்பு:சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே சௌபாக்கியலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே ஸ்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: தனலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே அஷ்டைஸ்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


வரலட்சுமி விரத ஸ்லோகங்கள்:

நம்பிக்கையுடன் சொல்லவேண்டிய ஸ்லோகங்கள்:ஓம் லக்ஷ்மி தேவியே நமோ நம: ஓம் தாமரை மேல் வீற்றிருந்தவளே நமோ நம: ஓம் பாற்கடலில் தோன்றியவளே நமோ நம: ஓம் செந்தூரத் திலகத்தோடு விளங்கும் நாயகியே நமோ நம: ஓம் நாரணனின் இதயத்தில் உறையும் தெய்வமே நமோ நம: ஓம் கருணையால் நிரம்பியவளே நமோ நம:


விரதத்தின் முக்கியப் பலன்கள்:

இந்த வரலட்சுமி விரதத்தை உண்மையான பக்தியுடன் கடைபிடிக்கிறவர்களுக்கு:

  • செல்வம் மற்றும் வளம் பெருகும்
  • திருமண பாக்கியம் நிலைத்து நிலைத்திருக்கும்
  • ஆரோக்கியம், வீரதம் மற்றும் வெற்றிகள் கிடைக்கும்
  • பிள்ளை பாக்கியம், கல்வி, ஞானம் பெருகும்
  • அஷ்டலட்சுமிகளின் அருளும் ஒருசேர கிட்டும்

இந்த புனித நாளில், மகாலட்சுமியின் திருவருளைப் பெறும் நோக்குடன், மேற்கண்ட மந்திரங்களை பக்தி பூர்வமாக உச்சரித்து வழிபடுங்கள். பௌர்ணமியுடன் கூடிய ஆடி மாதத்துக்குரிய இந்த சிறப்பு நாளில் அம்பிகையின் கருணை உங்கள் வாழ்வில் நிறைந்திருப்பதாகவே வாழ்த்துகிறோம்.

Facebook Comments Box