ஏன் மாலை வேளைகளில் இல்லங்களில் தவறாமல் தீபம் ஏற்ற வேண்டும்? எத்தகைய தீபம் ஏற்ற வேண்டும்?

மாலை வேளைகளில் வீட்டில் கட்டாயம் தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா? தீபம் ஏற்றினால் மன அழுத்தம் குறையும் என்பதை அறியலாம். தீபம் ஏற்றும் முறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் காணலாம்.

“ஏன் மாலை நேரங்களில் தீபம் ஏற்றுகிறோம் தெரியுமா?”

அதன் பொருள் இதுதான்… “தீபம் எரியும் வீடு வீணாகாது” என்ற பழமொழி உள்ளது. நாம் இல்லங்களிலும், கோயில்களிலும் ஏன் தீபம் ஏற்றுகிறோம்?

தீபத்தின் ஒளி தன்னைச் சுற்றி இருக்கும் தேவையற்ற அதிர்வுகளை (negative energy) ஈர்க்கும் திறன் உடையது. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச் சுற்றி நல்ல ஆற்றல் (positive energy) அதிகரிக்கும். சுற்றுப்புறம் தெளிவாகவும் வலிமையுடனும் தோன்றும்.

இரண்டு நாள் வீட்டில் தீபம் ஏற்றாமல் இருந்தால் வீடு சுடுகாடு போல் தெரியும். அனைவரும் சோர்வாக இருப்பார்கள். இதுவே தீபம் ஏற்றுவதன் தத்துவம்.

உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் சுத்தமாகின்றன. அதுபோல மணிபூரகமும் அனாஹதமும் நெய் தீபம் ஏற்றும் போது தூய்மை பெற்று நல்ல பலனை தருகின்றன.

உடலில் உள்ள சூரிய நாடி, சந்திர நாடி, சுஷும்னா நாடி என்பவை மிக முக்கியமானவை. சூரிய நாடி சக்தியும் வெப்பமும் தருகிறது. சந்திர நாடி குளிர்ச்சியையும் தருகிறது.

சுஷும்னா நாடி அந்த பரம்பொருளுடன் இணைந்து ஆன்மிகப் பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் சூரிய நாடி சுறுசுறுப்படையும். நெய் தீபம் சுஷும்னா நாடியைத் தூண்டுகிறது.

பொதுவாக நெய்தீபம் சகல சௌகரியங்களையும் வீட்டில் நன்மைகளையும் தருகிறது. திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். தடையில்லை. ஆனால் மாலை 6.30 மணிக்கு ஏற்றுவதே நம்முடைய மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில தீய சக்திகள் சூழலில் பரவி வீட்டிற்குள் வர வாய்ப்புள்ளது. ஒளியின் முன் அவை அழிந்துவிடும். ஆகவே அந்நேரத்தில் தீபம் ஏற்றுவதே அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த சம்பவம் இது. அமெரிக்காவில் உள்ள மகனின் வீட்டில் இருந்த தாய், மாலையில் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டிற்கு வருவதை கவனித்தார். இருவரும் வேலைக்கு செல்வோர்.

ஒருநாள் மகன் சீக்கிரம் வருவார், மறுநாள் மருமகள் முன்பாக வருவார். அவர்களுக்கு இன்னும் பிள்ளை இல்லை. ஒரே நேரத்தில் இருவரையும் பார்க்க முடியாது. ஒருவர் வந்தபோது மற்றவர் தூங்கியிருப்பார்.

ஒருநாள் தாய் மகனை அழைத்து, ஏன் தாமதமாக வருகிறாய் எனக் கேட்டார். மகன், “அம்மா, உனக்கு புரியாது. எங்களுக்கு மிகுந்த மன அழுத்தம்! இருவரும் கவுன்சிலிங்கிற்கு செல்கிறோம். ஒரு மணி நேரத்திற்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். ஆனால் சிறந்த டாக்டர்; அவர் சிகிச்சையில் சரியாகிவிடும்” என்றார்.

அதற்கு தாய், “நாளை டாக்டரிடம் செல்ல வேண்டாம். சீக்கிரம் வீடு வாருங்கள்” என்றார். மறுநாள் மாலை மகன், மருமகள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் மனம் கவரும் மணம் பரவியது.

இருவரையும் கைகள் கழுவி உடைமாற்றி பூஜை அறைக்கு வரச் சொன்னார். அவர்கள் சென்றனர். அங்கு மலர்களின் வாசம், தீப ஒளி நிறைந்த அறையில் அமரச் சொன்னார்.

இருவரும் கண் மூடி அந்த சூழலை உணர்ந்தனர். பின்னர் கண் திறந்தபோது, கவுன்சிலிங்கில் கூட கிடைக்காத அமைதி இங்கே கிடைத்ததாக கூறினர். தாய் மகிழ்ந்தார்.

குறிப்பு: மெழுகுவர்த்தி ஏற்றக்கூடாது. அதன் புகை உடலுக்கு கேடு தரும். ஆஸ்துமா, மார்புப் புற்று போன்ற நோய்களுக்கு அது காரணம். மண்ணெண்ணெய் தீபமும் வேண்டாம்.

வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால், தினசரி தீபம் ஏற்றச் சொல்ல வேண்டும். இது அவர்களின் முகப் பொலிவை அதிகரிக்கும்.

ஏன் மாலை வேளைகளில் இல்லங்களில் தவறாமல் தீபம் ஏற்ற வேண்டும்? எத்தகைய தீபம் ஏற்ற வேண்டும்?

Facebook Comments Box